திரையுலகில் எண்ட்ரி ஆகும் சூர்யா-கார்த்தி தங்கை

Published:

brindha1 - 2026நடிகர் சிவகுமார் குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்த சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாகவும், சூர்யாவின் மனைவி ஜோதிகா முன்னணி நடிகையாகவும் இருந்து வரும் நிலையில் தற்போது சூர்யா, கார்த்தி சகோதர்களின் சகோதரி பிருந்தாவும் திரையுலகில் எண்ட்ரி ஆகியுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரித்துள்ள திரைப்படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இந்த படத்தில் முதல்முறையாக தந்தையும் மகனுமான கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக், இணைந்து நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா, கார்த்தியின் தங்கை பிருந்தா ஒரு பாடலை பாடியுள்ளார். மிஸ்டர் சந்திரமெளலி என்று தொடங்கும் இந்த பாடல் உள்பட இந்த படத்தின் அனைத்து பாடல்களும் நேற்று வெளியாகியது.

தங்கையின் திரையுலக அறிமுகம் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது: ‘நான் எப்போதும் என் தங்கை பிருந்தாவுடன் விளையாடிக்கொண்டே இருப்பேன். ஆனால், எனக்கு இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என் தங்கை அதிகாரப்பூர்வமான பாடகியாக மாறியிருக்கிறார். இதற்கு காரணமான தயாரிப்பாளர் தனஞ்செயன், இசையமைப்பாளர் சாம், இயக்குனர் திரு ஆகியோருக்கு பெரிய நன்றிகள். மிஸ்டர் சந்திரமௌலி வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img