anitha1 - 2026‘சாமுராய்’, நடித்த ‘வருஷமெல்லாம் வசந்தம்’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த நடிகை அனிதா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாத்துறையில் தனக்கும் பாலியல் தொல்லை இருந்ததாக அதில் இருந்து மீண்டும்வர தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சினிமா துறையில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. நல்ல தொடக்கம் இருந்தால் நல்ல பயணம் இருக்கும். என்றாலும், நான் இந்த துறையில் போராடதான் செய்தேன்.
எனக்கும் அது நடந்தது. நாம் சரியாக யோசித்து அந்த வி‌ஷயத்தில் இருந்து வெளியே வரவேண்டும். என்ன செய்வது? இந்த துறை அப்படி இருக்கிறது. எங்கள் காலத்தில் எல்லாம் ரெம்ப மோசம். ஆனால், தற்போது எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending