vishal i will continue to - 2026விஷால் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள ‘இரும்புத்திரை’ திரைப்படம் ஏற்கனவே இண்டர்நெட்டில் நட்க்கும் மோசடிகளை விரிவாக அலசும் திரைப்படம் என்ற செய்தி வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த படம் ஆதார் அட்டையின் அபாயம் குறித்தும் சில கருத்துக்களை கூறியுள்ளதாம்

ஒவ்வொரு குடிமகனுக்கும் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட இந்த ஆதார் அடையாள அட்டையால் ஒரு சாதாரண குடிமகனுக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும்? எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலையில் ஒவ்வொரு குடிமகனும் என்ன செய்ய வேண்டும், ஆதார் அட்டையால் பொதுமக்களுக்கு ஏற்படும் ம் விளைவுகள்ள் என்ன என்பதை விஷால் இரும்புத்திரை படத்தில் அலசியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யின் மெர்சல் திரைப்படம் டிஜிட்டல் பணபரிமாற்றம், ஜிஎஸ்டி ஆகியவை குறித்து விமர்சனம் செய்த நிலையில் தற்போது விஷாலும் பாஜக அரசின் முக்கிய திட்டமான ஆதார் அட்டை குறித்த சில அபாயங்களை தனது ‘இரும்புத்திரை’ படத்தில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

விஷால்,சமந்தா, அர்ஜுன், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்துக்கு, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending