அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? நந்திதா

சினி நியூஸ் சினிமா

4097 nandita sweta - 2026விஜய் நடித்த ‘புலி’, விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய பாலகுமாரா ‘ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இளம் முன்னணி நடிகைகளில் ஒருவரான இவர் தற்போது அம்மா கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

இயக்குனர் கீதா ராஜ்புத் எனப்வர் இயக்கவுள்ள ‘நந்திதா’ என்ற படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து நடிகை நந்திதா கூறியதாவது, ‘இந்த படத்தின் கதை நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்டது மட்டுமின்றி இந்த படத்தின் கதை மற்றும் எனது கேரக்டருக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் கருதியே அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் நந்திதாவின் ஏழு வயது மகன் கேரக்டரில் ரெனேஷ் என்ற சிறுவன் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் வசந்த், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.