பிரபுதேவாவை திருமணம் செய்ய தயார்! பிரபல நடிகை பேட்டி

சினி நியூஸ் சினிமா

nikesha - 2026தலைவன், என்னமோ ஏதோ, நாரதன், 7 நாட்கள் போன்ற தமிழ் படங்களிலும் பல தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை நிகிஷா பட்டேல். இவர் தற்போது கஸ்தூரிராஜா இயக்கவுள்ள ‘பாண்டிமுனி’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நிகிஷா பட்டேல் கூறியபோது, ‘பிரபுதேவா தன்னுடைய குடும்ப நண்பர் என்றும், அவருடன் நடிப்பதை விட அவரை திருமணம் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நிகிஷாவின் இந்த கருத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே பிரபுதேவா, ரம்லத் என்பவரை திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தவர் என்பதும் பின்னர் சில ஆண்டுகள் அவர் நயன்தாராவை காதலித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நிகிஷாபட்டேலை அவர் திருமணம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.