போராட வேண்டாம் என்று ரஜினிகாந்த் சொல்லவில்லை: ரஞ்சித்

சினி நியூஸ் சினிமா

ranjith2 - 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிகாந்த் போராட்டம் குறித்த கருத்துக்கு விளக்கமளித்தபோது, ‘போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்து. இங்கு போராடாமல் எதுவுமே கிடைப்பதில்லை.

ரஜினி அவர்களும் போராட வேண்டாம் என்று கூறவில்லை. போராட்டத்தில் வன்முறை ஏற்படும்போது தரும் வலிகள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார்.

ranjithh3 - 2026நானும் இன்று போராடி கொண்டுதான் இருக்கின்றேன். போராட்டமே கூடாது என்றால் நான் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு உரிமையையும் போராடித்தான் பெறமுடியும் என்று கூறினார்.

முன்னதாக தூத்துகுடி சென்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.