வாணி ராணி’ சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது

சினி நியூஸ் சினிமா

sangeetha - 2026

சன் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வாணி ராணி’ இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை சங்கீதா விபச்சார வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புறநகர் பகுதிகளில் ஒன்றான பனையூர் என்ற பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இன்று சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நடிகை சங்கீதா ஒருசில பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.

இந்த ரிசார்ட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை சங்கீதா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் செய்த விசாரணையின் அடிப்படையில் இன்னும் சில நடிகைகள் சிக்குவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

1 thought on “வாணி ராணி’ சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.