கலக்க போவது யாரு’ இயக்குனரின் ‘செயலி’யில் ஜாக்குலின்?

சினி நியூஸ் சினிமா

seyali - 2026 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கலக்க போவது யாரு நிகழ்ச்சி தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ராஜ்குமார் தற்போது திரைப்பட இயக்குனராக மாறிவிட்டார்.

இவர் இயக்கும் முதல் படத்திற்கு ‘செயலி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கலக்க போவது யார்? நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜாக்குலின் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, விடிவி கணேஷ், சிங்கம்புலி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்தர், ஸ்ரீமன், பிரேம், இனியா, தேவதர்ஷினி இவர்களுடன் 5 பள்ளி குழந்தைகள் நடிக்கவுள்ளனர்.

seyali1 - 2026முழுக்க முழுக்க காமெடி மற்றும் கொஞ்சம் த்ரில் கலந்து உருவாகும் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்பதால் இன்னும் ஒருசில மாதங்களில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஓசியானோ ஏஜேஆர் சினி ஆர்ட்ஸ் பிரைவைட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.