போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்: எஸ்.ஏ.சி

சினி நியூஸ் சினிமா

traffic ramasamy - 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துகுடிக்கு சென்ற தினம் செய்தியாளர்களிடம் பேசியபோது போராட்டம் ஒரு ஒரு கருத்தை கூறினார். அவர் சொன்னதை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் நடித்து அவரை நேரடியாகவும், மறைமுகமாகவும் பலர் விமர்சனம் செய்து ரஜினி மீதான தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் பேசிய இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் என்று ரஜினியை மறைமுகமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

traffiramasamy - 2026டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு திரைப்படம் வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” என்று கூறினார்.

3 thoughts on “போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்: எஸ்.ஏ.சி”

  1. போராட கூடாதென்று யாரும் சொல்ல வில்லை ஆனால் எரிகிற வீட்டில் பிடிங்கிய மட்டும் லாபமாக கருதும் கயவர்களின் ஊடுருவலும் ஊக்கப்படுத்தும் அரசியல்வாதிகளும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.

  2. S A Cயின் வியாபார நோக்கம் தெரியாமல் இல்லை. பணமும் பெயரும் படுத்தும் பாடு.

  3. போராடவேண்டும் இது பிரிட்டிஷ் அரசாங்கம் அல்ல.நமது அரசாங்கம் . நமது பொது சொத்துக்கள். நம்மைக்காக்கும் காவலர்கள், நமது பொது மக்கள் பயன்படுத்தும் பேருந்துகள், தனிநபர் சொத்துக்கள் சேதம் இவைகள் செய்வோரை கடும் தண்டனை விதிக்கவேண்டும். போராடும் போது தனி நபர் வாகனங்களை தடுத்தால் , வன்முறையாக பெரும் உருண்டைக்கட்டையால் பொதுமக்கள் காவலர்களை அடித்தல் கல் வீசுதல் இதை நாட்டின் முன்னேற்ற அக்கறை கொண்டவர்கள் செய்வதை ஆதரித்துப் பேசும் தலைவர்களை பேசவிடாமல் செய்தால் தான் நாடு உருப்படும். வன் முறை ,பொதுமக்கள் சொத்து சேதம் , மிரட்டுதல் காவலர்களை அடித்தல் போன்றவை சட்டவிரோதப்போக்குகள் .
    போராட்டம் வான் முறையாக மாறி ௧௩ பேர் உயிர் இழப்புக்குக் காரணமான தலைவர்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டிய தலைவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.