100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…

Published:

prabas

தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே பரிச்சயமான நடிகர் பிரபாஸ், பாகுபலி திரைப்படத்திற்கு பின் இந்திய அளவில் புகழடைந்துள்ளார். இவரின் திரைப்படங்கள் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக இவர் நடிக்கவுள்ள 4 படங்களில் சுமார் ரூ.1000 கோடி பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 100 கோடிக்கு மேல் அவர் சம்பளமும் பெற்று வருகிறார். எந்த நடிகருக்கும் இவ்வளவு முதலீடு செய்யப்பட்டதில்லை.

இந்நிலையில், பிரபாஸ் வசிக்கும் வீட்டின் மதிப்பு ரூ.100 கோடி என்பது தெரியவந்துள்ளது. மேலும், ரூ.60 கோடி மதிப்பில் ஒரு பண்ணை வீட்டையும் பிரபாஸ் கட்டியுள்ளார். அதில், நீச்சல்குளம், உடற்பயிற்சி கூடம், 6 படுக்கை அறைகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளதாம் . படப்பிடிப்பு இடைவெளியில் பிரபாஸ் இங்குதான் ஓய்வெடுப்பது வழக்கம். அதேபோல்,ஆடம்பர கார் பிரியரான பிரபாஸ் ரூ.,68 லட்சம் மதிப்புள்ள பிம்.எம்.டபிள்யூ கார் , 2 கோடி மதிப்புள்ள ஜாக்குவார் மற்றும் 8 கோடி மதிப்புள்ல ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆகியவற்றை வைத்துள்ளாராம்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img