திருமா.,வை நம்பினா பஞ்சமியும் கிடைக்காது.. எந்த டேஷும் கிடைக்காது … பொங்கும் காயத்ரி ரகுராம்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி
thiruma gayathri 1 - 2026

திருமாவளவனை நம்பினா பஞ்சமி நிலமும் கிடைக்காது, எந்த டேஷும் கிடைக்காது என்று மீண்டும் கொளுத்திப் போட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

நடிகையும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராமை கண்டித்து கருத்து வெளியிட்ட திருமாவளவன், ஒட்டுமொத்த நடிகைகளையும் “அவுத்துப் போட்டுவிட்டு ஆடுபவர்கள்” என்று மிக கீழ்த்தரமான முறையிலும், பெண்களையே கொச்சைப் படுத்தும் வகையிலும், தனது புத்திக்கே உரியவகையில் வக்கிரமான முறையில் விமர்சனம் செய்தார்.

ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்துகின்ற வகையில் திருமாவளவன் கருத்து தெரிவித்த போதும், சோற்றிலே உப்பு போட்டு தின்றவர்கள் ஆவேசம் அடைந்து, எதிர்ப்பு தெரிவித்தார்கள். தாங்கள் அப்படித்தான், திருமாவளவன் சொன்னதில் என்ன தவறு என்று தங்களை அதனுள் ஐக்கியப் படுத்திக் கொண்ட சன நாயகமிலாத மாதர் சங்கங்கள் திருமாவளவனுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் நடிகை காயத்ரி ரகுராம் திருமாவளவன் குறித்து மீண்டும் ஒரு கருத்தைப் பதிவு செய்தார்.

பஞ்சலி நில விவகாரத்தை திசை திருப்புவதற்காக எனது பெயரை பயன்படுத்துகின்றனர். பஞ்சமி நிலத்தை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது திருமாவளவனின் நோக்கமல்ல. அவர் தனது வாழ்க்கைக்காக கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார். ஏழை மக்களுக்கு திருமாவளவன் எதுவும் செய்யவில்லை.

உங்கள் பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டுமானால் சிறந்த வழக்கறிஞர், ஹிந்து தலைவரான சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்களாலும், பாஜக.,வாலும் தான் முடியும். அவருக்கு மட்டுமே பஞ்சமி நிலத்தை மீட்பது எப்படி என்பது தெரியும். வேறு என்ன? திருமாவளவன் பஞ்சமி நிலத்தை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் விற்று தனது பாக்கெட்டை நிரப்பிக் கொள்வார். பஞ்சமியும் கிடையாது, எந்த டேஷும் கிடைக்காது.

திருமாவளவன் கட்சியினர் கடைசி வரைக்கும் தொண்டன்தான். கொள்ளை மிரட்டல் கொலை பண்றதுக்கு மட்டும்தான் நீங்க பயன்படுவீங்க. பாவமா இருக்கு உங்களைப் பார்க்க. … என்று எழுதியுள்ளார்.

முன்னதாக, திருமாவளவன் சனாதன எதிர்ப்பு என்ற பெயரில், இந்து மதத்தை இழிவுபடுத்திப் பேசினார். தொடர்ந்து கோயில்களை இழிவுபடுத்தினார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார். “இவரை எங்கே பார்த்தாலும் இந்துக்கள், செருப்பால் அடிக்க வேண்டும்” என்று கருத்து பதிவிட்டார்.

இதை அடுத்து, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், காயத்ரி ரகுராமை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசினார்கள். அந்த தொலைபேசி உரையாடல்களை காயத்ரி ரகுராம், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது திருமாவளவனின் கட்சியினரின் கீழ்த்தரமான நடவடிக்கைகளை மக்களுக்கு தோலுரித்து காட்டியது.

இதனைத் தொடர்ந்து திருமாவளவன் கட்சியினர் காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கத்தை முடக்கினர். மேலும், காயத்ரி ரகுராம் வீட்டு முன்பு சென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.