அஸ்வினியின் படுபாதக படுகொலைக்குப் பின்னால்…!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

aswini - 2026

அஷ்வினியை கொன்றது, ஒரு சாதாரண நபர் இல்லை…

1. சட்டமன்றத்திலேயே ஒரு பெண்ணிடம் “நாடாவை அவிழ்த்துப் பார்” என்று பேசியவரை அவ்வாறு பேசிய ‘சிலேடையை’ ரசித்து சற்றும் முகம் சுளிக்காமல் தனது தலைவராக கொண்டாடும் சமூகம்.

2. கோடிக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கும் தெய்வத்தை தாசி என்று எழுதியவரை கவிஞராக கொண்டாடும் சமூகம்.

3. மனைவியாக இரு பெண்களை ஏற்று பின் அவர்களை துரத்தி விட்டு மற்றுமொருவரோடு ‘லிவிங் டுகெதர்’ நவநாகரீக முறையை சாத்தியப்படுத்தி அவரையும் உதறிவிட்டு வாழ்பவர் முதல்வர் கனவில் மிதக்க அதற்கு ஆர்ப்பரிக்கும் சமூகம்.

4. பள்ளி/கல்லூரி செல்லும் பெண்களை விரட்டிச் சென்று, எப்படியாவது அவர்களுக்கு தன்னை காதலிப்பதை தவிர வேறு கதியில்லை என்ற நிலையை உண்டாக்குவதே பிறவி நோக்கம் என்பதை திரும்பத் திரும்ப ஆயிரக்கணக்கான சினிமாக்களில் அழுந்தப் பதிய வைக்கும் பொறுக்கித்தனத்தை ‘கலைத்துறை’ என கொண்டாடும் சமூகம்.

5. ‘உரலு ஒன்னு அங்கிருக்கு
ஒலக்கை ஒன்னு இங்கிருக்கு
நெல்லுக்குத்த நேரம் சொல்லுடி என் ராசாத்தி’,

‘வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ’

போன்ற எண்ணற்ற ஆபாச பாடல்களை தினமும் பேருந்துகளிலும் தொலைக்காட்சிகளிலும், இவ்வளவு ஏன், கோவில் திருவிழாக்களிலும் ஒலிபரப்பி மகிழும் சமூகம்.

6. கேடுகெட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொலைக்காட்சி சீரியல் என்ற பெயரில் வீட்டின் உள்ளே அனுமதித்து அவற்றை ரசித்து, எதிர்பார்த்து, மகிழும் சமூகம்.

7. கோவிலுக்கு உள்ளேயே ஒரு பெண்ணை மிக அருவெறுப்பான வார்த்தையில் திட்டியதை எந்தவித எதிர்வினையும் இன்றி இயல்பாக கடந்து போகும் சமூகம்.

இங்கே அஷ்வினிக்களும், சுவாதிக்களும், நிர்பயாக்களும் கொல்லப்படாமல் உயிர் வாழ்தல் தெய்வ அதிசயம்.

அழகேசன்களும், ராம்குமார்களும் வெறும் அம்புகளே.

ஏக பத்மினி விரதமாக வாழ்ந்த ஶ்ரீராமனுக்கு கோவில் கட்ட அனுமதிக்காமல். தான் வளர்த்த பெண்ணையே மணந்த கயவன் சிலை வைத்து வணங்கும் ஈனப்  பிறவிகள் கொண்ட நாடு இது…!

பின் குறிப்பு: சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் கருத்து….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.