
என் தமிழகம் ஏன் இப்படி மாறிபோய்விட்டது?
பெண்ணை கொலை செய்தவனை ஆதரிக்கிறான், (அவள் இவனை ஏமாற்றியிருப்பாள் எனக்கூறி)..
செம்மரம் வெட்டிக் கடத்தலுக்கு உதவிபுரிபவனை உழைப்பாளி என்கின்றான்..
எல்லை தாண்டி மற்றவர் எல்லையில் மீன் பிடிக்கச் செல்பவனை தமிழன் என்கின்றான்..
ஒரு அரசியல் பிரச்சினையில் எடுத்த எடுப்பில் ஒரு பெண்ணை கேவலமாக கோவிலில் வைத்து திட்டுபவனை தியாகி என்கின்றான், அவன் திட்டியதிற்காக அவனை அறைந்த தமிழச்சியை கேவலமாகப் பேசுகின்றான்..
தமிழ் தமிழ் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கின்றான் உணர்ச்சி பொங்க, ஆனால் அவன் குழந்தையை சேர்த்திருப்பதோ ஆங்கில வழிக்கல்வியில்..
கோவில்களுக்கு சென்று விழுந்து விழுந்து கும்பிடுகின்றான்.. ஆனால் கோவிலை இடிப்போம் என்பவனுக்கு கொடி பிடிக்கின்றான்..
ஆற்று மணலை அள்ளும்பொழுது வேடிக்கப்பார்த்துவிட்டு, அதனை ஏற்றிச்செல்ல தன் வீட்டு மணல் லாரிகளையே அனுப்பி விட்டு, டில்லுக்குச் சென்று அம்மணமாக போராடுபவனை போராளி என்கின்றான்..
விளை நிலங்களை பல மாஸ்ட்டர் பிளான் மூலம் (யூபிஏ அரசின் 100நாள் திட்டம் போன்று) விவசாயத்தினை ஒழித்து, விலைநிலமாக்கிவிட்டான்..
ஆனால் அவனே ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விளை நிலம் வீணாகிறது என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றான்..
ஓன்ஜிசி போன்ற கார்ப்பரேட்டுகளை வெளியே போ என்கின்றான். ஆனால் அவனே தமிழகத்தில் தொழில்வளம் குறைந்துவிட்டது, தமிழர்களை அழிக்கப்பார்க்கிறார்கள் என்று கூப்பாடு போடுகின்றான்..
ஊழல் ஊழல் என்று கத்துகின்றான், ஆனால் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்தால் பழிவாங்கும் முயற்சி என்கின்றான்..
தமிழையே பேசி பழகுங்கள் என்று மேடையில் வாய்கிழிய பேசுகின்றான், ஆனால் வீட்டிலோ அவன் குழந்தைகளுக்கு தமிழே சரியாக சொல்லிக்கொடுக்காமல் இருக்கின்றான்..
மத்திய அரசு தமிழினை அழிக்கப்பார்க்கிறது என்று வாய்க்கு வாய் சொல்லிவிட்டு, தன் பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கின்றான்..
இந்து பண்டிகைகளை அந்நிய கலாச்சாரம் என்று கூறிவிட்டு, கிருஷ்துமஸ்ஸினையும், இரம்ஜானையும் கொண்டாடி மகிழ்கிறான்..
விநாயகர் வந்தேறிக்கடவுள் என்று கூறிவிட்டு, அல்லாவினைக் கும்பிட நாகூர் தர்க்காவிற்கும், ஏசுவை வணங்க வேளாங்கண்ணிக்கும் செல்கின்றான்..
பெண் சுதந்திரம் என்று கப்சா விட்டு, அரசியலில் ஒரு பெண் தைரியமாக செயல்பட்டால், சற்றும் யோசிக்காது கேவலமான வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றான்..
கல்லுக்கு சக்தியுள்ளதா என்று கேலி செய்து பரப்பிய பகுத்தறிவுவாதி, அதே கற்சிலைக்கு அவமானம் ஏற்படின் பைத்தியமாக மாறிப்போகின்றான்..
இதுவா என் வள்ளுவன் கண்ட தமிழ் இனம்?
இதுவா என் பாரதி ஆசைபட்ட தமிழ் இனம்?
இதுவா என் பாண்டியனை தலைவனாகக் கொண்ட வீர சைவக் கூட்டம்?
இதுவா நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய கட்டபொம்மன் வழி வந்த கூட்டம்?
இதுவா மருது பாண்டியர் வழி வந்த கூட்டம்?
இவர்களுக்காகவா வாஉசி செக்கிழுத்தார். திருப்பூர் குமரன் உயிர் நீத்தார், வாஞ்சிநாதன் துரையை சுட்டு வீழ்த்தினார்.
யோசிப்போம், மாற்றத்தை நோக்கி நகர்வோம் , நம்மால் முடியும். நாளை நமதே.



