
ஞாயிறு நேற்று மாலை சென்னை மெரீனாவில் இந்துக் கடவுள்களை இழிவு படுத்தி மதமாற்ற பிரச்சாரம் செய்த கிறிஸ்தவர்களை கண்டித்து D6 அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற மத்திய சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் மேகநாதன் மற்றும் தினேஷ் ஆகியோரை எஸ்.ஐ ராஜபாண்டி காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவியை அனைத்து விட்டு கடுமையாக கைகளாலும் பூட்ஸ் கால்களாலும் மிகக் கடுமையான முறையில் தாக்கி உள்ளார்.
மேலும் இந்து தெய்வங்களை இழிவு படுத்துகிறார்கள் என்று சொன்ன பொது மக்களையும் கேவலமாகி பேசி துரத்தி உள்ளார்.
போலீஸ் காரரின் அராஜக சட்டவிரோத தாக்குதலில் இருந்து மேகநாதன் மற்றும் தினேஷ் ஆகியோரை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது காவல் துறை உதவி ஆய்வாளரை தாக்கியதாக இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.



