இசையை ரசித்தலோடு நிறுத்திய காலம் போய், ராகம் ஆராய்ந்து, ப்ருஹாக்களின் அழகில், குரலின் மென்மையில்.. மயங்கிய பள்ளிப்பருவ காலம் வசந்தமானது. கோவையின் பாஷ்யகார்லு வீதியில் ஶ்ரீராம நவமி உற்சவம், இப்போது சோபை குறைந்து காணப்பட்டாலும், அதன் intensity குறையவில்லை. இதே ஒரு காலகட்டத்தில் ஹாலுக்குள் நுழைய முடியாத அளவிற்கு ஜேஸுதாஸ், ஷேசகோபாலன், முதல்.. மாண்டலின்ஶ்ரீ, சிட்டிபாபுவின் வீணையைக்கூட விடாமல் கேட்டு ரசித்த நாட்கள் பக்தி என்ற ஒன்றை தாண்டிய அழகு நிரம்பி வழிந்த சாயந்திரம் கூடும் முன்னிரவுகள், இன்னமும் மனதைவிட்டு அகலவேயில்லை. வைரமூக்குத்தி மாமிகள் முதல், பட்டுப்புடவையோடு வலம் வரும் இதர அழகிய பெண்களின் தலையில் சூடிய மல்லிகையின் மணம் இன்றுமே நாசியில் ஒரு நொடி நின்று மறைகிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். ஏன் ஷேக் சின்ன மோலானா நாதஸ்வரம் வாசிக்கவில்லையா? எல் ஆர் ஈஸ்வரி மாரியம்மாவை காலையில் உருகி அழைக்கவில்லையா..? ஜேசுதாஸின் குரலில் மயங்கிய குருவாயூர் கிருஷ்ணன் மேலான காதலின் காரணம் கண்ணீர் உன் கண்ணில் சுரக்கவில்லையா..? அதேபோல்.. மொகம்மது ரஃபி பாடி, நௌஷத் இசையில் ஷகீல் பதாயினி எழுதிய பாடலை.. ரஃபி பாடும்போது ப்ரொடக்ஷன் கம்பெனியின் அக்கவுன்டன்ட் கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒரு மகோன்னத நிலைக்கு போகவில்லலையா..? ஹஃபீஸ் ஜலந்தரியின் கிருஷ்ண கன்னையா புல்லரிக்க வைக்கவில்லையா..? இதெல்லாம் நடந்தால் ஓகே.. ஆனால் டி எம் கிருஷ்ணா, OS அருண், உண்ணி, நித்யஶ்ரீ, தியாகராஜர் கீர்த்தனைகளை டிங்கர் பட்டி பார்த்து பாடினால் ஏன் கோபம் வருகிறது சங்கிகளுக்கு..? இதற்கான என் பதில் கடைசி பாராவில்.
கர்நாடக இசைக்கும் பக்திக்கும் முக்திக்கும் என்னதான் சம்பந்தம்..? நிறைய நிறைய இருக்கிறது. வேதங்களில் சாமவேதம் என்பது ரிக் மற்றும் யஜூர் வேதங்களைப்போன்றே பல இடங்களில் ஒன்றிப்போகிறது. ஆனால் சாமவேதம் நமக்கு கொடுக்கப்பட்டதே இசையோடு பக்தியையும் இணைத்து ஒன்றாக்கி தந்தமையால்.. சாம கான என்று அறியப்படுகிறது. அதனால் என்ன..?
சங்கீதம் இப்படியான அண்டவெளியில் நாதாஎன்று அழைக்கப்படுகிறது. நா என்பது ப்ராணமாகவும், அதாவது நமக்கு இன்றியமையாத காற்று.. மூச்சாகவும்.தா என்பது நெருப்பாகவும் அது இல்லாத இப்பெருவெளி இயங்காது என்று இதன் இருப்பை அறியப்படுத்துகிறது. ஓம் எனும் ஒரு ப்ரணவ மந்திரம் இசையின் மூலமான சப்தஸ்வரங்களின் மூலம் என்கிறது கீதை.
தியாகராஜரின் க்ருதி இதை ஆமோதிக்கிறது. சாமவேதத்தில் samavedadidam gitam samjagraha pitamaha: ” i.
(Sangita ratnakaram) என்று வருகிறது. கந்தர்வ வேதம் அதாவது இசை என்பது ஐந்தாவது வேதம் என்கிறது உப வேதம்.
தெற்கத்திய இசையில் பக்தி என்பது இசையோடு பின்னிப்பிணைந்த ஒன்று. மும்மூர்த்திகளுக்கு முன்னே உள்ள காலத்தில்..அன்னமாச்சார்யா, ஆண்டாள், திருஞானசம்பந்தர், புரந்தரதாசர், ஜெயதேவர், நாராயண தீர்த்தர் சதாசிவ ப்ரம்மேந்திர்ர் என்று இறைவனை இசையால் அடைந்த பலரை உதாரணம் காட்டலாம். மும்மூர்த்திகளின் காலத்தை சொல்லத்தேவையே இல்லை. இவர்களுக்கு பின் ஸ்வாதித்திருநாள் என்று உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம். இசையும் பக்தியும் இல்லாதவர்கள் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பலை போன்றவர்கள் என்கிறார் தியாகராஜர். இரண்டும் இணைந்து ஆண்டவனை அடையலாம் என்கிறார்.
இப்ப நாம என்ன செய்கிறோம்..? நம் இசை சிற்றின்பம் சார்ந்த சினிமா இசையாகிவிட்டது. ச்சுத்தா ச்சுத்தா என்று..பக்திக்கும் இதற்கும் ஸ்னானப்ப்ராப்தி என்றாகிவிட்டது. ஆனால் இந்த தெற்கின் இசையில் பக்தி பிணைந்து இருக்கும் ரகசியத்தை நம்மைவிட வாடிகன் கவலையுடன் பார்க்கிறது. இப்படியான plagiarism கூடிய பட்டி டிங்கரிங்கால்.. ஆணியடிக்கப்பட்ட ஏசப்பரை எக்குத்தப்பாய் பாட்டில் நுழைத்ததால்.. தியாகராஜரை.. தியோடர்ராஜன் என்றும்.. இவரின் பாடலின் பக்தி மிகுதியால், ஏசுவும் மேரி மகதிலினியும் இறந்து போனபின்னரும் தியாகராஜருக்கு காட்சியளித்ததாக சொல்லப்படும். மணிசங்கர அய்யர் அல்லது சாருஹாச அய்யங்கார் கிருஸ்துவர்கள் எளிதாய் இந்த மதத்தில் புழங்குவது, காட்டப்படும். அய்யர்கள் எழுப்பும் ஏசு கூட்டங்களுக்கு மற்றவர்கள் எளிதாய்.. அவாளே போயாச்சு என்று ஒரு comfort கொண்டுவர முனைகிறார்கள். அதோடு, இசை, கடவுள், கோவில், வேதம், பலி, ஆராதனை, ஆலயம் ஆச்சி என்று மதம் மாறும் மக்களின் சுகத்தை முன்னிட்டு எல்லாம் மாற்றிவிட்டபின் லகுவாகிவிடுகிறது. கோவிலில் நுழையும்போது தெரியும் துவஜஸ்தம்பம் முதல், கோபுரம், வரை காபியடித்து, ஏசுக்கு பட்டையடித்து, கையில் வேல் தந்தபின் சாமான்யனின் பார்வையில் எல்லாம் ஒன்றுதான் போல என்று தோன்ற ஆரம்பிக்கிறது. திருவள்ளுவர் முதல், ஏசு நாமாவளி, ஏசு சஷ்டி கவசம், ஏசு சுப்ரபாதம் என்று கொலை குத்து காப்பியடி வேகமாய் வெளியிடப்படுகிறது.
ஆனால் சத்தமில்லாமல் நம்மைப்போன்ற pagans ஆப்ரஹாமிய மதத்திற்கு மாற்றப்பட்டபின் எந்தவித கூச்சலும் யார் காதிற்கும் விழப்போவதல்லை. இதற்கு பணம், சாதி, அல்லது ஏதோ ஒரு சமூக பிரச்சினைகள் கூட போதும். பின்னர
ஒரு கட்டத்தில் எல்லா சின்னங்களையும் அழித்தே விடலாம். மாற்றப்பட்டவர்கள் எளிதாய் இதற்கு தேவ ஊழியமாய் இதை செய்து உதவுவார்கள்.
இதற்கும் கிருஷணா யேசு கீதம் பாடுவதற்கும் என்ன சம்பந்தம்..? என்னதான் பிரச்சினை?
யேசு கீதம் பாடுவது தவறே இல்லை. ஆனால்.. மேல் சொன்ன பக்திஇயைந்த நம் கலாசாரங்களின் விழுமிய.. தொன்மையான பாடல்களும், இசையும், கீர்த்தனைகளும், பஜன்களும், நம் நிலப்பரப்பிற்கு சம்பந்தமேயில்லாமல் 2018 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலில் தொங்கி இறந்து போன ஒரு ஆசாமிக்கு நாம் மாற்றி..போற்றி பாடுவது.. தியாகராஜர் முதல் எல்லா மூர்த்திகளுக்கும் செய்யும் துரோகம். இதை ஹிந்துவாக இருக்கும் உணரும் ஒவ்வொருவனும் எதிர்த்தல் அவசியம்.
ஏசுவின் கரோலை எதிர்க்கவில்லை. ஆனால் என் மடியில் கைவைக்காதே. உம்..ஆச்சி என்பது செட்டிநாட்டு ஹிந்துப்பெண்மணிதான். இதை வைத்து வியாபாரம் பண்ணும் மாற்றுமத வியாபாரிக்கு கண்டனங்களை தர வேண்டியது அவசியமாகிறது. டி எம் கிரிஸ்டினா தாராளமாய் கிருத்துவ பாடல்களை பாடட்டும். என் பக்தி கலந்த இசையின் ராகத்தோடும், கீர்த்தனையிலும் கை வைக்காமல்.. அப்படி கைவைத்தால்.. இப்படி வாட்சப்பில் வந்தது போல்தான் டிசம்பர் சீசன் கூட நடக்கும்..
பேரின்ப பெருவிழா
———————————
டிசம்பர் ம்யூசிக் கார்னிவல்
நாள் : டிசம்பர் 25 , 2018
இடம் : சங்கீத வேதாகமப் பள்ளி, தியோடர் கிஷ்நமா ஆசாரி அரங்கம்..
இசைப் பேராயர் விருது பெறுபவர் :திருமதி ஹருணா
இசை அருளாளர் விருது பெறுபவர் : திரு “ஆம் என்” அறுண்
நிகழ்ச்சி தலைமை : தமிழினப் போராளி செபாஸ்டியன்.
கர்நாடக பண்பாட்டு சங்கீத நிகழ்ச்சியில் ஹருணா அற்புதமாகப் பாடுகிறார்..
ராகமாலிகை :
“ஆடு மேய்க்கும் பையா!
நீ வாழ வேண்டும் மெய்யா!”
காய்ச்சின புட்டிங் தாரேன்!,
கருப்பு நிற ப்ளம் கேக் தாரேன்!
வாய் நிறைய ஒயினும் தாரேன்; வறுத்த விறால் மீனும் தாரேன்..(ஆடு)..
மார்கழி மாதம் முப்பது நாட்களும் நோன்பு நோற்று ‘ஆண்டி’யர் பாவை
மீடியா ஸ்பான்சர் :
விஜய் டி வி , தி ஹிந்து..
நிகழ்ச்சி ஏற்பாடு : ‘சங்கமம்’, ‘மய்யம்’
அலைகடலெனத் திரண்டு வர அழைக்கிறோம்!!!!
கடைசியாய்….
மாற்று மத ஆசாமிகள் ஹிந்து பாடல்களை பாடினாலும்..மதம் சார்ந்த பாடல்கள் இயற்றினாலும்.. ஹிந்து மதம் மாற அதை செய்வதில்லை. ஹிந்துக்களும் அவர்களை மதம் மாற்றுவதில்லை. ஜேசுதாஸின் மகனுக்கு ஞானஸ்னானம் செய்ய முடியாது என்ற கேரள ஆயர்களால்.. ஆல்மோஸ்ட் முழு ஹிந்துவான ஜேசுதாஸும் இளையராஜாவும் விதிவிலக்கு. இவர்களை யாரும் கொண்டுவரவில்லை. தானாய் வீடுவந்து சேர்ந்தவர்கள்.
டிஎம் கிருஷ்ணா மாதம் ஒரு Non Hindu பாடல் பாடட்டும்.. ஆனால் ஸ்வாதித்திருநாளையோ, புரந்தரதாசரையோ, புனிதவெள்ளிக்கு பலிகடா ஆக்குவதைத்தான் கேள்வி கேட்கிறோம் என்கிற அடிப்படை அறிவில்லாமல் சங்கிகள், பக்தர்கள் என்பவர்களின் மூளை..முட்டிக்கும் கீழே இருப்பதை உறுதி செய்ய யோசிக்க கூட தேவையே இல்லை.
-பிரகாஷ்.




