தூக்கிலயே போடாம கசாபை பாகிஸ்தானுக்கு ஏன் ரகசியமா அனுப்பியிருக்காது… காங்கிரஸ்?!

Published:

mumbai terror attack - 2026

ஒருவரும் 26/11 கொலைகாரன் அஜ்மல் கசாபின் இறந்த உடலைப் பார்க்கவில்லை. காங்கிரஸ் அரசு அவனுக்குத் தூக்கு தண்டனை அளித்து பின்னர் புதைத்தனர் என்பதற்கான சாட்சியும் கிடையாது.

அப்படியிருக்க காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ., அரசாங்கம் அஜ்மல் கசாபை ரகசியமாக பாகிஸ்தானிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு.. லஷ்கர் அமைப்புடன் ரகசிய உடன்படிக்கை ஏன் ஏற்படுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள்..?

ஏனெனில் இந்த தீவிரவாத செயல்பாட்டிற்குப் பின் அப்போதைய இந்திய அரசு பாகிஸ்தானின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..! என்பதை நினைத்துப் பார்த்தால், இத்தகைய சந்தேகம் ஏற்படுகிறதே!


இது எப்படி இருக்கிறது..! எப்போதாவது இவர்கள் பேச்சுப்படி எந்த “பக்தர்” களாவது இவர்களை அஜ்மல் கஸாபை தூக்கிலிட்டதற்கு சாட்சி என்னவென்று கேட்டார்களா..?

எந்த ஒரு அமெரிக்க தேசத்தவனாவது, எந்த கட்சியாவது, எந்த மீடியாவாவது, பின் லேடனையும் முல்லா ஒமரையும் கொன்றதற்கு பாகிஸ்தானில் புகுந்து நடத்திய சர்ஜிகல் ஸ்ரைக்கிற்கு அன்றைய அமெரிக்க அதிபரான பராக் ஒபாமாவிடம் சாட்சியும் சம்மனும் கேட்டார்களா..?

ALSO READ:  FCRA சட்டம்; வெளிநாட்டு சதிகளும் உள்நாட்டு அரசியலும்!

வெறும் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போன சீரழிந்த பைத்தியங்கள் மட்டுமே ஒவ்வொரு முறையும் நம் தேசத்தில்.. இந்திய அரசு திடீரென தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்பட்டால்… ஊளையிட்டுக் கொண்டு கதறுகிறார்கள்.

இதற்கு இரண்டு மூன்று காரணங்கள்.

ஒன்று… திரும்ப மோதிஜி ஆட்சி அமைத்தால் இவர்களின் இமேஜ் முழுமையாக உடைத்தெரியப்படும்

மதச்சார்பின்மை என்கிற போர்வையில் தேசத்தையும் மக்களையும் பிரித்து அதன் மூலம் இவர்கள் பல காலம் லாபம் பார்த்த விஷயம் முழுமையாக வெளியே தெரிந்துவிடும்.

ஒரு வெளிநாட்டுப் பெண்மணியின் ஹிட்டன் அஜெண்டாவால் தேசத்தையே சுரண்டி ஒவ்வொரு காங்கிரஸ்காரனும் அடித்த கொள்ளைகள் வெளியே வந்துவிடும்.

இவர்கள் தாங்கள் அடித்த கொள்ளைகளை மறைக்க வெளிநாட்டு அரசின் உதவிகளை வாங்கிக் கொண்ட விஷயம் வெளி வந்துவிடும்.

வெளிநாடுகளில் இவர்களின் சேமிப்புகளும் வாங்கி வைத்த சொத்துகளும் இங்கு வெளிச்சம் போட்டுவிடும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

நாம்தான் விழிப்புடன் இந்தத் திருடர்களிடமிருந்து நம் தேசத்தைக் காக்க வேண்டும்..!

-நெல்லை சுரேஷ்

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

Related articles

Recent articles

spot_img