முகிலன் என்னை கற்பழித்து விட்டார்! உடன் போராட்டக் களத்தில் இருந்த பெண் புகார்!

Published:

mukilan rajeswari - 2026

சூழலியல் போராளியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்ட முகிலன், தன்னை கற்பழித்து விட்டதாக அவருடன் போராட்டக் களத்தில் இருந்த ராஜேஸ்வரி என்ற பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.

சூழலியல் போராளியாகக் காட்டிக் கொண்டவரும், காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான முகிலன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். குறிப்பாக காவிரி மணல் கொள்ளை குறித்தும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்தும், ஜல்லிக்கட்டு போராட்டம், மீத்தேன் போராட்டம் என பல போராட்டங்களில் பங்கெடுத்தவர்.

இந்தப் போராட்டங்களின் போது அவருக்கு துணையாக நாமக்கல்லைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணும் உடன் இருந்தார்.

இதனிடையே, ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ஆடியோ வீடியோ ஆதாரங்களை சென்னையில் வெளியிட்ட பின்னர், முகிலன் திடீரென மாயமானார். அவர் எங்கிருக்கிறார், தேர்தல் நேரம் என்பதால் யாராவது அரசியல் சித்து  விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்களா? அல்லது அவரே எங்காவது ஒளிந்து கொண்டாரா என்றெல்லாம் அனுமானங்கள் உலவின.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இந்நிலையில் நீதிமன்றத்தில் இதுகுறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இதை அடுத்து காணாமல் போனதாகக் கூறப் படும் முகிலன் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டக் காலத்தில் அவருடன் துணையாக நின்ற ராஜேஸ்வரி என்ற பெண், கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் போராட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்ற போதெல்லாம் தன்னைக் கற்பழித்து விட்டதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் புகார் அளித்துள்ளார். அவரது புகாரால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img