உன்னால் எங்க குடும்ப மானமே போச்சு…! ஆ.ராசாவை அழகிரி அடித்துத் துவத்த புனிதக் கதை தெரியுமா… ஸ்டாலின்..?!

Published:

stalin mk - 2026

“அவன் ஒரு காலிப்பயல் அவனை நம்பியெல்லாம் கட்சியை ஒப்படைக்க முடியாது”

சொன்னது யார்?

உன் தந்தை தானே ஸ்டாலின்!

இன்று நாளுக்கு நாள் உன் பித்தம் தலைக்கேறி என்னன்னவோ பேசுகிறாய்..!  இன்று சிவகங்கையில் தரக்குறைவாக பேசியதால் நானும் ஏன் தரத்தை குறைக்க வேண்டியிருக்கிறது..!

என்ன சொன்னாய் ?

ராஜா வெற்றி பெற்றால் சிவகங்கைக்கு அவமானம் என்றாய்! உன்னை அறியாமல் உன் பதட்டத்தை வெளிப்படுத்தி விட்டாய் ஸ்டாலின்!

இந்த ஒரு வார்த்தை போதும் கார்த்தி தோற்றுவிட்டார் என்பதற்கு! சரி போகட்டும் !

அடுத்து என்ன சொன்னாய் …? ராஜா ஜெயித்தால் நாடாளுமன்ற புனிதம் கெடும் என்றாய்!

“புனிதம் ” எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத மூடனே சொல்கிறேன் கேள்…~
புனிதத்தை பற்றி யார் பேசுவது? சொல்லவா..

கார்த்தி பாரம்பரிய குடும்பத்தில் இருநது வந்திருக்கிறார் என பட்டயம் வேறு வாசிக்கிறாய். என் நினைவு நாடாக்களை சுழற்றவா..?!

சிதம்பரம் யார் தெரியுமா ? அவர் ” புனிதம் ” தெரியுமா? அப்போது ராஜிவ்காந்தி பிரதமர்! ஒருநாள் மதிய இடைவேளையின் போது நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு வருகிறார்! அப்போது நளினி சிதம்பரமும் ஜெயந்தி நடராஜனும் தலைமுடி பிடித்து கட்டிப் பிரண்ட கதை தெரியுமா? அதுவும் பிரதமர் முன்னிலையில் !

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

எதற்காக? நீ சொல்லும் ” புனிதம் ” காக்க!

அடுத்து 2010. கார்த்தியும் உங்கள் வீட்டு பெண்ணும் ” கருத்து ” ஒன்றுபட காணாமல் போய் அதற்கு ஈடாக சிதம்பரம் உன் தந்தையிடம் கொடுத்த ஏக்கர்கள் கணக்கு தெரியுமா?

“புனிதம் ” காக்க சிதம்பரம் கொடுத்த விலை!

2013 – உனது தந்தை மைய அரசில் இருந்து வெளியேற முடிவு செய்தபோது உன் அண்ணன் அழகிரி மறுத்து விட்டால் என்ன செய்வது? துணைக்கு அடியாட்கள் போல டிஆர் பாலு ஆ ராசாவை அனுப்பியபோது… உன்னால் தானடா எங்க குடும்ப மானமே போனது ” என டெல்லி விமான நிலையத்தில் உனது அண்ணன் ராசாவை புரட்டி எடுத்தது அந்த புனிதம் காக்க தானே!

அப்போது எங்கே போனது உன் புனிதம் ?!

தான் திருடி பிறரை நம்பாள் என்ற சொல்லாடல் எங்கே படித்து இருக்கப் போகிறாய்?

முதன் முதலாக நாடாளுமன்ற வாயிற்படிகளை முத்தமிட்டு தலைவைத்த நரேந்திர மோடியல்லவா புனிதம் காத்தார் ! அதெல்லாம் தெரியாது உனக்கு!

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

கடைசியாக அந்தக் கூட்டத்தில் ராஜாவிற்கு எதிராக வாக்களிப்பீர்களா என அம்மா பாணியில் கேட்ட போது அங்கு நிலவிய கனத்த மெளனத்தைப் பார்த்தாயா ஸ்டாலின்…
நாங்கள் பார்க்காத புனிதமா? ராசாவா? கனிமொழியா? சிதம்பரமா? ஜெயந்தியா? கார்த்தியா? திருச்சி சிவாவா?

புனிதம் என்ற சொல்லை சொல்வதற்கு கூட ஒரு புனிதம் தேவைப்படுகிறது ஸ்டாலின் அவர்களே!

  • ஜெயமணி

Related articles

Recent articles

spot_img