மேய்க்குறது எருமை… அதுல என்னடா பெருமை?! #தமிழன்டா

உரத்த சிந்தனை புகார் பெட்டி

ls1 horz - 2026

ஏய், தமிழன்னா கெத்துடா!

பாராளுமன்றத்துல தமிழ் வாழ்கனு சொல்றோம் டா!

டேய், இங்க வா!

வீட்டுக்கு மின்இணைப்புக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்த?

1000 ரூபாய்!

யாருகிட்ட, பீகார்காரன் கிட்டவா கொடுத்த? தமிழன் கிட்ட தானே?

ரேசன் கார்டு வாங்க எவ்வளவு லஞ்சம் கொடுத்த?

3,000 ரூபாய் கொடுத்தேன்!

யாருகிட்ட பானிபூரி விற்குறவன்கிட்டயா கொடுத்த? தமிழன் கிட்ட தானே?

வீட்டுக்கு குடிநீர் வசதி வாங்க எவ்வளவு லஞ்சம் கொடுத்த?

இணைப்புக்கு 2,000 ரூபாய்!

உத்திரப் பிரதேசகாரன்கிட்டயா கொடுத்த? இல்ல உள்ளூர் தமிழன் உ.பி கிட்ட தானே?

ஏண்டா தமிழன்னு உணர்விருந்தால், எதுக்குடா தமிழன் தமிழன் கிட்டயே லஞ்சம் வாங்கணும்?

ஏதாவது லஞ்சம் கொடுக்காம இந்த தமிழ்நாட்டில் தமிழன் வாங்க முடியுமா?

மேய்க்குறது எருமை,அதுல என்னடா பெருமை?

  • தமிழ் பதவி ஏற்பு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கிண்டல்கள்

1 thought on “மேய்க்குறது எருமை… அதுல என்னடா பெருமை?! #தமிழன்டா”

  1. எல்லா அரசியல் வாதிகளும் குறிப்பாக நாடாளுமன்றத்தில் வெட்டி பந்தாவுக்காகவும் தாங்கள்தான் தமிழை வாழவைக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழில் அதுவும் தேவையில்லாமல் வாழ்க பெரியார், அண்ணா, அம்பேத்கார் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி எல்லாம் சொல்லி பதவி ஏற்றவர்கள் அடித்த கூத்து. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் வாழ்க என்று ழகரத்தை சரியாகக் கூட பலர் உச்சரிக்க வில்லை என்பதுதான். வேதனையான விஷயம். தமிழின் காவலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் முதலில் தாங்களும் தங்களை சேர்ந்தவர்களும் தமிழை தவறின்றி உச்சரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழன்னை அவர்களை மன்னிக்க மாட்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.