ஆரோக்கிய டிபன்: சிறுதானிய சிரட்டை புட்டு!

Published:

millet puttu - 2026

சிறுதானிய சிரட்டை புட்டு

உடல் பருமன், நீரிழிவு, எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கும் வளரும் குழந்தைகள் பெண்களுக்கும் ஏற்ற சிறந்த உணவு. மாலை நேரத்தில் உட்கொள்ள சிறந்த உணவு.

தேவையான பொருட்கள்

1/4 கப் ராகி மாவு (முளைக்கட்டிய கேழ்வரகு மாவு)
1/4 கப் நாட்டுக் கம்பு மாவு (முளைக்கட்டிய கம்பு மாவு)
1/4 கப் வரகு, சாமை, தினை,
குதிரைவாலி, பனிவரகு சேர்த்த மாவு
1 சிறியது தேங்காய்
உப்பு

செய்முறை

அனைத்து மாவையும் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து கிளறவும்.

கிளறிய மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். மாவை மிக்ஸி போட்டு மூன்று சுற்று சுற்றி எடுக்கவும். மாவு பூப்போல ஆகிவிடும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

பின் தேங்காய் சிரட்டை / கொட்டங்கச்சியை எடுத்துக்கொண்டு அதன் உள் முதலில் தேங்காய் துருவலை வைத்து பின்பு மாவை வைத்து நிரப்பவும்.
அதன் மேல் மீண்டும் தேங்காய் . துருவலை வைத்து நிரப்பவும்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

அடுத்ததாக இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் அதில் இந்த தேங்காய் சிரட்டையில் நிரம்பியுள்ள மாவு கலவையை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

அல்லது குக்கரை அடுப்பில் வைத்து அதன் மேல் ஆவி வந்தபின் விசில் போடும் இடத்தில் இந்த தேங்காய் சிரட்டையை வைத்து அதன் மேல் ஆவிவந்தபின் அடுப்பை அணைத்து எடுக்கவும்.

Related articles

Recent articles

spot_img