2020-2021ம் கல்வி ஆண்டு: +1 ற்கு புதிய பாடத்திட்டம்!

padathitam

தமிழகத்தில் மேனிலைக் கல்வியில் தற்போது நடைமுறையில் உள்ள பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து, மேம்படுத்தப்பட்ட பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி பள்ளிக் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மொழிப்பாடம், ஆங்கிலம் மற்றும் நான்கு முதன்மை் பாடங்கள் என கல்வி பயிற்றுவிக்கப்பட்டு மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணவர்கள்தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் மாநில பொதுப் பள்ளி வாரியத்தின் நிர்வாக குழுக் கூட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கூடியது.

அதன் தொடர்ச்சியாக தற்போது நடைமுறையில் உள்ள பாடத் தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி , மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு ஏற்றதாகவும் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், பாடப்பிரிவுகளை ஏற்படுத்தி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 4 முதன்மைப் பாடத் தொகுப்புகளுடன் புதியதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகளை பிளஸ் 1 வகுப்புக்கு 2020-2021ம் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதை ஏற்று அரசுத் தேர்வுகள் இயக்குநரும் அதன்படி புதிய பாடத் தொகுப்பை அறிமுகம் செய்ய அரசிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதினார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

மாநில பொதுக்கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கை, அரசுத் தேர்வுகள் இயக்குநர் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள பாடத் தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையில் உள்ள 4 பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதியதாக 3 பாடத் தொகுப்புகளை அறிமுகம் செய்து நடைமுறைப் படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

இதன்படி,பகுதி 1- மொழிப்பாடம், பகுதி 2-ஆங்கிலம் தவிர, பகுதி 3ல் புதிய வழிமுறைகளுடன் கூடிய 3 முதன்மை பாடத் தொகுப்பு(500 மதிப்பெண்கள்) அல்லது தற்போது நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்பையோ(600 மதிப்பெண்கள்) தெரிவு செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் தெரிவு செய்யும் பாடத் தொகுப்பில் உள்ள பகுதி 1 மொழிப்பாடம், பகுதி 2,ல் ஆங்கிலம், பகுதி3ல் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும்.

புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு 2020-2021 கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

பகுதி 1ல்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, உருது, இந்தி, சமஸ்கிருதம், அரபிக், பிரஞ்ச், ஜெர்மன் இவற்றில் ஏதாவது ஒரு பாடம்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

600 மதிப்பெண்களுக்கான பாடத் தொகுப்பு தற்போது நடைமுறையில் உள்ளபடி பாடங்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

பகுதி 3ல்: அறிவியல் பாடத் தொகுப்பில்

  1. கணக்கு, இயற்பியல்,
    வேதியியல்,
  2. இயற்பியல், வேதியியல்,
    உயிரியல்,
  3. கணக்கு, இயற்பியல்,
    கணினி அறிவியல்,
  4. வேதியியல், உயிரியல்,
    மனையியல்.

கலைப் பாடத் தொகுப்பில்:

  1. வரலாறு, புவியியல், பொருளியல்.
  2. பொருளியல், வணிகவியல்,
    கணக்குப்பதிவியல்,
  3. வணிகவியல், வணிக கணிதம்,
    புள்ளியியல், கணக்குப் பதிவியல்.
  4. வரலாறு, பொருளியல்,
    அரசியல் அறிவியல்,
  5. சிறப்புத் தமிழ்,வரலாறு,பொருளியல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories