10,12 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: வழங்கவும், வாங்கவும் நெறிமுறைகள் என்ன..?

கல்வி தமிழகம்
shanmugam

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, விலையில்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 கல்வியாண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்து படிக்க வசிதியாக, விலையில்லா புத்தகம் மற்றும் வீடியோ வடிவிலான பாடங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தி உள்ளது.

ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். மென்பொருள் பதி வேற்றத்திற்கு ஒரே நேரத்தில் அதிக மாணவர்களை வரவழைக்க வேண்டாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது

இது தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணையில்,

பாடப்புத்தகம் வாங்க வரும் மாணவர்கள், பெற்றோர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்யவேண்டும்

ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களை வரவழைத்து பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த பின்னர் வந்து பாடப்புத்தகங்களை பெறலாம்

பாடப்புத்தகங்கள் மற்றும் இதர கல்வி சார்ந்த உபகரணங்களை விநியோகம் செய்வதற்கு முன்பாக பள்ளிகளில் உள்ள கதவு, ஜன்னல், மரச்சாமான்கள் ஆகியவற்றில் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் பாடப் புத்தகங்களை விநியோகம் செய்வதற்கு முன்பாக இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

சமூகவிலகலை கடைபிக்கும் வகையில், நிற்பதற்கான வட்டங்கள் வரையப்படவேண்டும்,

மாணவர்கள் அல்லது பெற்றோர்கள், கல்வி உபகரணங்களை வாங்க வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும் .

கை கழுவும் வகையில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தியிருக்கவேண்டும் எனவும், கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்படவேண்டும் .

பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டையை எல்லா நேரத்திலும் அணிந்திருக்கவேண்டும்

பள்ளி வளாகத்தில் கூட்டம் சேர்க்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கை கழுவும் பகுதிகள், கழிவறைகள் உள்பட அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். ஒவ்வொரு பள்ளிகளின் நிர்வாகம் தான் தங்கள் பள்ளிகளில் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதற்கு பொறுப்பு.

முகக்கவசத்தை தொடுவதை குறைக்கவேண்டும். முகம் அல்லது முகத்தின் எந்த பகுதியையும் தொடுவதை தவிர்க்கவேண்டும்.

மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள், படிகளின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடி, லிப்ட் உள்பட பிற தரை தளங்களை தொடுவதை தவிர்க்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.