நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என்பது வதந்தி: செங்கோட்டையன்!

Published:

sencottaian-3

பள்ளிகள் நவம்பரில் திறக்கப்படும் என்பது வதந்தி என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்திலும் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது.

இந்நிலையில், பள்ளிகள் அனைத்தும் வருகின்ற நவம்பரில் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால், நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்படுவது வதந்தி எனவும் பெற்றோர்களின் மன நிலையையும் கொரோனா பரவலையும் பொறுத்து பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img