chennai rains 3 2 - 2026

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகம்
chennai rains 3 2 - 2026

சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும்,சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யும் .

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள-தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு (நாளை முதல் 17-ந்தேதி வரை) தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிகபட்சமாக 17 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக திருத்தணி 13, கொடுமுடி 12, மதுராந்தகம், திண்டிவனம் தலா 11, சூளகிரி, ஆலங்காயம் தலா 10 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.