ஏப்ரல் 22, 2021, 7:53 மணி வியாழக்கிழமை
More

  நாளை… வீடுகளில் கந்த சஷ்டி படிக்க இந்து முன்னணி வேண்டுகோள்!

  ஆகஸ்ட் 9 ம் தேதி ஞாயிறு அன்று வீடுகளில் கந்தர் சஷ்டி கவசம் படிப்போம்.. என்று

  muruga-vel-pooja
  muruga-vel-pooja

  இந்துக்களுக்கு வேண்டுகோள் … ஆகஸ்ட் 9 ம் தேதி ஞாயிறு அன்று வீடுகளில் கந்தர் சஷ்டி கவசம் படிப்போம்.. என்று இந்து முன்னணி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

  இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கை…

  தமிழகத்தில் அண்மைக்காலத்தில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்துக்  கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ஒன்று தலைதூக்கியது. அவர்கள் முருகனை இழிவாகப் பேசியதைக் கேட்ட மக்கள் வெகுண்டெழுந்தனர்.

  மக்களின் ஒருமித்த ஆன்மீக உணர்வால் இன்று அந்தக் கூட்டம் கதிகலங்கிப் போயுள்ளது.    இது போன்ற கடவுளைப் பழிப்பவர் கூட்டம் தமிழகத்தில் இனி ஒருபோதும் தலை தூக்கக் கூடாது. இனி எவருக்கும் அந்த எண்ணம்கூட வரக்கூடாது.

  எனவே  நமது பக்தியை, சக்தியை கயவர்களுக்கு உணர்த்த வேண்டும்.என் சாமி, என் கோவில், என் பாரம்பரியம் பற்றி இழிவாகபேச யாருக்கும் உரிமையில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்.ஆகவே இந்துமுன்னணி சார்பாக தமிழக இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

  வருகின்ற 9.8.2020 (ஞாயிறு) அன்று களமிறங்குவோம்.நமது பலத்தை காட்டுவோம்.அன்றைய தினம் அவரவர் வீட்டின் முன்பு கோலமிட வேண்டும்.மாலை 6.01 மணிக்கு அவரவர் வீட்டின் வாசலில் கந்தர் சஷ்டி கவசம் சொல்ல வேண்டுகிறேன். (வாசலில் முடியாதவர்கள் வீட்டிற்குள்)

  நமது வீட்டின் வாசலில் முருகன் படம் அல்லது வேல் படம் அல்லது வேல் வைத்து வேல் பூஜை செய்ய வேண்டும்.

  நமது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தகவல் சொல்லி அவர்களையும் இந்த மகத்தான பணியில் ஈடுபட வைக்க வேண்டும்.

  லட்சக்கணக்கானவர்களை ஈடுபட வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது நமக்காக அல்ல நமது தர்மத்திற்காக நமது பாரம்பரியத்தை காப்பதற்காக. கொராணா நோய் தொற்றிலிருந்து நமது நாடு விடுபட்டு நலமுடன் வாழவும் பிரார்த்தனை செய்வோம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »