விஜயவாடா கனகதுர்கா ஆலயத்தில்… ஈ.ஓ., உள்பட 18 பேருக்கு கொரோனா!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
vijayawada kanakadurga
vijayawada kanakadurga

விஜயவாடா கனகதுர்கா ஆலயத்தில் கொரோனா பரபரப்பு.
ஆலய ஈஓ., உள்பட 18 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது.

தினமும் பக்தர்களால் களையோடு விளங்கும் விஜயவாடா கனகதுர்கா கோவிலில் கொரோனா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நோய்த்தொற்று விதிகள் காரணமாக இரண்டரை மாதங்களுக்கு மேலாக கோவிலை மூடி வைத்திருந்த அதிகாரிகள் தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தளர்வுகளோடு மீண்டும் தரிசனத்தை ஆரம்பித்தார்கள்.

ஆனால் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அறிவித்திருந்தாலும் கூட கொரோனா பரவியதால் அதிலும் எண்ணிக்கையை மீண்டும் குறைத்தார்கள். இது இப்படி இருக்கையில் அண்மையில் கோவில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் 18 ஊழியர்களுக்கு பாசிட்டிவ் வந்துள்ளதாக பரிசோதனைகள் தெரிவித்துள்ளன.

vijayawada kanakadurga
vijayawada kanakadurga

இன்று சிராவண மாத வெள்ளிக்கிழமை ஆனதால் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பிரத்தியேக பூஜைக்காக வந்திருந்ததால் கொரோனா அச்சம் மேலும் பெருகியது. கொரோனா வைரஸ் பரவல் கோவிலில் அதிகமாக இருந்தாலும் பக்தர்களின் வரவு மட்டும் குறையவில்லை.

அதனால் அதிகாரிகள் கூட என்ன செய்வதென்று தெரியாமல் மலைக்கும் நிலைமையே இங்கு. இவர்களை திருப்பி அனுப்ப முடியாத சூழலில் தரிசனம் நடத்தி வருவதாக தெரிகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

அதிகாரிகளோடு கூட ஊழியர்களுக்கும் கொரோனா பரவியிருப்பதால் கோவிலை கண்டைன்மெண்ட் ஜோனாக அறிவிக்கும் விஷயம் குறித்து அரசாங்கத்தோடு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.