இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம்ஸ் தயாரிக்க மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு!

ugc-pic
ugc-pic

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம்கள், பொம்மைகள் தயாரிக்க மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது..

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:

இந்தியாவில் விளையாட்டு பொம்மை சந்தை 1.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இவை பெரும்பாலும் இறக்குமதி சந்தையின் ஆதிக்கத்திலேயே உள்ளது. இந்த பொம்மைகளில் பெரும்பாலானவை இந்திய பாரம்பரியம், நாகரிகம் மற்றும் கலாசார செழுமியங்களை பிரதிபலிப்பதாக அமைவதில்லை.

எனவே, பொம்மை இறக்குமதியை குறைக்கவும், இந்திய நாட்டின் நாகரிகம், வரலாறு, கலாச்சாரம், புராணங்கள் அடிப்படையிலான பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கவும் ‘ஆத்மநிர்பர்பாரத் அபியான்’ என்ற திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் படி, நமது நாட்டின் கலாச்சாரங்களை கருத்தில் கொண்டு விளையாட்டு பொம்மைகள், வீடியோ கேம்கள், விளையாட்டு கருத்துருக்களை உருவாக்க மத்திய கல்வி அமைச்சகம் ‘டாய் கேத்தான்-2021’ என்ற போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சிறு, குறு தொழில்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் இணைந்து ‘டாய் கேத்தான்’ நிகழ்ச்சியை வரும் பிப். 27-ம் தேதி முதல் நடத்த உள்ளன. இதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டார்ட்-அப்கள், பொம்மை வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் தங்களது புதுமையான பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகளை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் ஜன. 20-ஆம் தேதிக்குள் https://toycathon.mic.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப் படும். இதைத் தொடர்ந்து, சிறந்த பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகள் ‘டாய் கேத்தா’னின் தேசிய பொம்மை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ‘டாய் கேத்தான்’ போட்டி குறித்து தெரியப்படுத்த வேண்டும்.!

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories