பள்ளியில் ஆசிரியர், மாணவி என பரவிய தொற்று! பெற்றோர் அதிர்ச்சி!

கல்வி சற்றுமுன் தமிழகம்
corona-test
corona-test

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசுப் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதியானது.

இதனால் அவர்களுடன் பணிபுரிந்த 64 ஆசிரியர்களுக்கும் 60 மாணவிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வகுப்புகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. அவர்களுக்கு எடுத்த பரிசோதனை முடிவுகள் இன்று வெளி வந்துள்ளது.

அதில் நான்கு ஆசிரியர்களுக்கும் ஒரு மாணவிக்கு கொரோனா தோற்று இருப்பது உரையானது. இதுகுறித்து தொற்று கண்டறியப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தற்போது பொதுத்தேர்வு நெருங்குவதால் பாடம் நடத்தப்பட்டு வந்த வகுப்பறைகள் மூடிவிட்டு மாணவிகளுக்கு வேறு இடத்தில் பாடங்களை நடத்த அறிவுரை செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

மேலும் பள்ளியை மூடவும் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திபட்டு வருகின்றது. மேலும் ஒரே பள்ளியில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.