கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
naveen patnaik

ஒடிசாவில் கொரோனா தடுப்பு பணியின்போது இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப் படும், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தியாகிகளாக கருதி இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று, முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

ஒடிசாவில், கொரோனா தடுப்பு பணியில் உள்ள சுகாதார பணியாளர்கள் உயிரிழந்தால், அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் எனவும், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வீடியோ மூலம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார பணியாளர்கள் மற்றும் உதவியாக உள்ளவர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். அவர்களின் ஈடு இணையில்லாத பணியை பாராட்டி விருது வழங்கப்படும்.

கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.