கர்ணாவதியில் நடைபெறுகிறது ஏபிவிபி.,யின் 64வது தேசிய மாநாடு!

கல்வி சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
abvp conference - 2026

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பின் 64வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் கர்ணாவதியில் (ஆமதாபாத்) வருகின்ற டிச.27 முதல் டிச.30 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணியாற்றுகின்ற மாணவர் தலைவர்கள் சுமார் 3500 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 100 மாணவர் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அவர்களில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து 13 பேர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் டிச.25 இன்று காலை 7.45 மணி அளவில் மாநகர செயலாளர் விஷ்ணு தலைமையில் ஜாம் நகருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறிய போது, இந்த மாநாட்டில் தேசிய அளவிலான கல்வி, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் கலாசார பரிமாற்றம் தொடர்பான கலை நிகழ்ச்சிகள், கலாச்சார உடை ஊர்வலம், பொதுக்கூட்டம், கண்காட்சிகள் நடைபெறும். மேலும் சிறந்த இளைஞர்க்கான விருது, சேவைக்கான விருது ஆகிய விருதுகளும் வழப்ங்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக நமது குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கலந்து கொள்கிறார்..
. என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.