பள்ளி செல்ல கட்டாயப்படுத்திய பெற்றோர் ! விஷம் அருந்தி மாணவன் தற்கொலை !

கல்வி தமிழகம்

school 1 - 2026சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள வீரியதண்டா பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், இவர் ஒரு விவசாயி. இவரது மகன் யுவராஜ் வயது 14. அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

யுவராஜுக்கு பள்ளிக்கு செல்வதிலோ  படிக்கவோ விருப்பம் கிடையாது . ஆனால் பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இதனால் வெறுப்படைந்த யுவராஜ் வீட்டில் விவசாயத்திற்கு என்று வைத்திருந்த மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

பெற்றோர் மகனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.