mukilan tirupathi - 2026

சமூக செயற்பாட்டாளர்கள் என்ற அடைமொழியுடன் உடன் இருந்த பெண் ஒருவரால் பாலியல் புகார் கூறப் பட்ட நிலையில் காணாமல் போன முகிலன், இன்று திருப்பதியில் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப் பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.

காணாமல் போனதாகக் கூறப் பட்ட முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் சண்முகம் தகவல், அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்திருந்தார். இதை அடுத்து அவர் குறித்த தகவல்கள் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகின.

கடந்த பிப்ரவரி மாதம் முகிலன் காணாமல் போனதாக தகவல் வெளியானது. முகிலன் குறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றவர் பின்னர் மாயமானார் என்றும், அவர் சமூக செயற்பாட்டாளராக இருந்ததால், அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம், அல்லது கடத்தப் பட்டிருக்கலாம் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறப் பட்டன.

இந்நிலையில், அவர் குறித்து தகவல் அளிக்குமாறு நீதிமன்றத்தின் மூலம், போலீஸில் கோரப் பட்டது. முகிலன் காணாமல் போனது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையை அடுத்து, முகிலன் உயிருடன் இருப்பதாகவே சிபிசிஐடி போலீஸார் கடந்த மாதம் நீதிமன்றத்தில் கூறினர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இந்த நிலையில், திருப்பதியில் அளவுக்கு அதிகமாக தாடி வைத்துக் கொண்டு, சந்தேகத்துக்கு இடமான வகையில், செல்லும் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடீரென தன்னைத் தான் போலீஸார் அடையாளம் கண்டு கொண்டு பிடித்து விட்டனர் என்று தவறாக எண்ணிய முகிலன், கூடங்குளத்துக்கு எதிராக கோஷம் இட்டுக் கொண்டு சென்றார். இதை அடுத்தே அவர் முகிலன் என்ற அடையாளம் வெளி உலகுக்குத் தெரியவந்தது.

இந்நிலையில் இதுவரை தமிழக போலீஸிடம் இருந்து தகவல் வராததால், அவர் ரயில்வே போலீஸாரின் பாதுகாப்பில் வைக்கப் பட்டிருந்து, பின்னர் தமிழக போலீஸார் வசம் ஒப்படைக்கப் படுவார் என்று கூறப் பட்டது.

இருப்பினும், ஏன் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு முகிலன் ஆந்திராவில் ஒளிந்திருக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன. தமிழக போலீஸார் அவ்வளவு தீவிரமாக தேடியும், பேச்சு மூச்சு விடாமல், தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு முகிலன் ஏன் இருக்க வேண்டும்?! தான் காணாமல் போன விவகாரம், தமிழக அரசியலில், அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியதும், சட்டமன்றத்தில் கூட அது எதிரொலித்ததையும் கண்டும்கூட பேச்சு மூச்சு விடாமல் முகிலன் ஏன் அவ்வாறு தலை மறைவாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

ALSO READ:  திருவனந்தபுரம் – சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

ஆந்திர மாநிலம் நக்ஸல்கள் நடமாட்டம் உள்ள பகுதி. இத்தனை நாட்கள், நக்ஸல் எண்ணத்துடன் தீவிர மக்கள் நலன் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்த முகிலன், நக்ஸலைட்களுடன் தொடர்பில் இருந்தாரா? இத்தனை நாட்கள் என்ன செய்தார் என்ற கேள்விகள் எழுப்பப் படுவது இயற்கைதான்! தமிழக போலீஸார் விரைந்து இத்தகவல்களைச் சேகரித்து வெளியிட வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending