தூக்கு தண்டனை குறித்த சமீபத்திய செய்திகள்

கடந்த 19/02/2018 தேதியன்று சென்னை போரூர் மதனந்தபுரம் நிகிதா பிளாட்ஸ் குடியிருப்பில் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை அதே குடியிருப்பில் இருந்த கொடூரன் தஷ்வந்த் என்ற கணிப்பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்து போர்வையை கொண்டு சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்தது மட்டுமல்லாமல், முட்புதரில் வீசி பெட்ரோல் ஊற்றி எரித்து தடயங்களை அழித்தான். இந்த வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. இந்நிலையில் தூக்கு தண்டனை குறித்தான கடந்த கால நிகழ்வுகள் சில.

மரண தண்டனை என்பது விசாரனை நீதிமன்றம் அறிவித்தவுடன் நடைமுறைக்கு வராது. உயர்நீதிமன்றம் அதை உறுதி செய்ய வேண்டும். விசாரணை நீதிமன்றத்திற்குப் பின் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் கருணை மனு என்ற நிலையில் தண்டனைக் கைதிகளுக்கு கால அவகாசம் உள்ளது. இதை மனதில் கொண்டுதான்; உச்சநீதிமன்றத்தின் உறுதியும், அனுமதியும் பெற்ற பின்னே தூக்கிலிட முடியும்.

தமிழகத்தில் தூக்கு தண்டனை விதிப்பது என்பது அரிதாகவே நடைபெறுகிறது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு நீண்ட காலமாகிவிட்டன.
நாடு விடுதலைக்குப் பின், இந்தியாவில் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவது, சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

1947க்குப் பின், 52 பேர் துாக்கிலிடப்பட்டதாக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 1975- – 91ம் ஆண்டுகளுக்கு இடையில், 40 பேர் துாக்கிலிடப்பட்டுள்ளனர். ‘அம்னஸ்டி’ அமைப்பு கணக்கின் படி, 2001ல், 33 பேருக்கும், 2002ல், 23 பேருக்கும், 2005ல், 77 பேருக்கும், 2006ல், 40 பேருக்கும், 2007ல், 100 பேருக்கும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1991க்குப் பின், இதுவரை, 26 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பபட்டுள்ளது. 2017, டிச., 31 வரை, 371 கைதிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கீழாண்மை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், உயர் நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்கின்றனர். அதிலும் உறுதி செய்யப்பட்டவர்கள், உச்ச நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். அதிலும், தண்டனை உறுதி செய்யப்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்கின்றனர். அதிலும் உறுதியானால், ஜனாதிபதிக்கு கருணை மனு விண்ணப்பிக்கின்றனர். கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால், குற்றவாளி இறுதியாக, துாக்கிலிடப்படுகிறார்.

ALSO READ:  இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

சுதந்திரத்துக்குப்பின் தூக்கிலிடப்பட்டவர்கள்

தேதி – குற்றவாளி
15/11/1949 – நாதுராம் கோட்சே
15/11/1949 – நாராயண் ஆப்தே
06/01/1989 – சத்வந்த் சிங்
06/01/1989 – கேஹர் சிங்
09/10/1992 – ஹர்ஜிந்தர் சிங் ஜிண்டா
09/10/1992 – சுகதேவ் சிங்க சுஹா
27/04/1995 – ஆட்டோ சங்கர்
14/08/2014 – தனஞ்ஜெய் சட்டர்ஜி
21/11/2012 – அஜ்மல் கசாப்
09/02/2013 – அப்சல் குரு
30/07/2015 – யாகுப் மேனன்

2009ல் டில்லியில் ஐ.டி., பெண் ஊழியர் கொலை வழக்கில், இரண்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட துாக்கு தண்டனை, 2018ல் ஆயுள் தண்டனையாக குறைப்பு* ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட துாக்கு தண்டனை, 2014ல் ஆயுள் தண்டனையாக குறைப்பு.

வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேருக்கு, 2004ல் விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை, கருணை மனு பரிசீலிக்க அதிக காலம் எடுத்துக் கொண்டதால், 2014ல் ஆயுள் தண்டனையாக குறைப்பு.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருப்பூரில், 2015ல் தந்தை, மகளை கொலை செய்த செல்வம் என்பவருக்கு, 2017 மே மாதம்விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை, செப்டம்பரில் ஆயுள் தண்டனையாக குறைப்பு.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ வழக்கில், 11 பேருக்கு, 2011ல் விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை, 2017ல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பல்வேறு கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆட்டோ சங்கர் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

ஊழல் வழக்கில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் சுற்றுலா சென்று வந்த பேருந்து தருமபுரியில் எரிக்கப்பட்டது. அதில் 3 மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நெடுஞ்செழியன், முனியப்பன், மது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கோவையில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 வயது சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்தும், அவளது தம்பி ரித்திக் என இருவரையும் கொலை செய்த வழக்கில் மனோகர் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ALSO READ:  இன்று சனி பெயர்ச்சி: சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னையில் 10 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் மோகன், கோபி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
நாகர்கோவில் நீதிமன்றத்தில் அய்யாவு என்பவரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற ராதாகிருஷ்ணன், ஷேக்மீரான், செல்வம் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செல்வம், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கு சுந்தர்ராஜ், ஜெயகுமார் ஆகியோரும் தூக்கு தண்டனை பெற்றவர்கள்.

சமீபத்தில் உடுமலைப்பேட்டை பொறியியல் பட்டதாரி சங்கர் 2016ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் சங்கர் மாமனார் சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

#தூக்கு_தண்டனை
#Hanging_Sentence

கட்டுரை:  – கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories