ஹிந்துக்கள் மிகச் சிறிய சிறுபான்மையினராக வாழ்ந்த நவகாளிக்கும், திப்பேராவிற்கும் முஸ்லீம் லீக் தனது களத்தை மாற்றியது. அங்கே ஹிந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஜிஹாத் என்னும் கொலைவெறித் தாக்குதல் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட இயலாத ஒன்று.
கூட்டங்கூட்டமாகக் கொலை, மதமாற்றம், கற்பழிப்பு, கடத்தல், ஹிந்துப் பெண்ணை முஸ்லீம் ஆணுக்கு கட்டாயமாக மணமுடித்தல் என படுபாதகச் செயல்கள் வாரக் கணக்கில் தொடர்ந்து நடந்தன.
கிழக்கு வங்காள கிராமம் ஒன்றிலிருந்த நிவாரண மையத்திலிருந்து, 1946 நவம்பர் 6ம் தேதி மிஸ். மியூரியல் லெஸ்டர் என்பவர் எழுதினார் :
’’ பெண்களின் நிலையே அனைத்திலும் மிகப் பரிதாபத்திற்குரியது. தங்கள் கணவர்கள் தங்கள் கண் முன்னாலேயே கொல்லப்படும் கொடூரத்தைக் காணும் கொடுமை, கணவனின் கொலைக்குப் பொறுப்பானவர்களில் ஒருவனுக்கே கட்டாயத் திருமணம் செய்விக்கப்படும் கொடுமை. அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாட்டிறைச்சி உண்ணச் சொல்வது…
ஆச்சார்யா கிருபளானி தன் மனைவி சுசேதா கிருபளானி ,பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற போது, சுசேதா அம்மையார் தன் கையில் சைனைட் விஷம் வைத்திருந்தார். தன்னிடம் முஸ்லீம் வெறியாளர்கள் முறை தவறி நடந்தால் அங்கேயே அதை சாப்பிட்டு விடுவதற்கு.
ஹிந்துப் பெண்கள் கடத்தப்படுவதை, முஸ்லீம் கவர்னர் எஃப் பர்ரோஸிடம் ஆச்சார்யா கிருபளானி சுட்டிக் காட்டிய பொழுது, முஸ்லீம்களைக் காட்டிலும் ஹிந்துப் பெண்கள் அழகாக இருப்பதால் இதுபோல நடக்கிறது என்று அகம்பாவத்தோடு கூறினார்.
இதைக் கேட்ட கிருபளானிக்கு ‘’அவரைப் பளாரென அறையலாம் போலிருந்தது‘’ என்று பதிவு செய்திருக்கிறார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதன் முதலில் போய் ஹிந்துக்களின் தற்காப்பு அமைப்பைப் பலப்படுத்தி உதவி புரிந்தவர், பின்னாளில் பாரதிய ஜனசங்கத்தை தொடங்கிய டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆவார்.
பின்னர் காந்தியும் கூட அமைதி ஏற்படுத்த அங்கு வந்திருந்தார். ஆனால் அவரைச் சந்தித்த ஹிந்துக்கள் கொதித்துப் போய் அவரிடம் மிகுந்த வெறுப்புணர்வுடன் பேசினர். கல்கத்தாவிற்கு நடந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிகாரில் பெரும்பான்மையாக இருந்த ஹிந்துக்கள் முஸ்லீம்களை துவைத்து எடுத்தனர்.
கல்கத்தாவிலும், வங்கத்தின் இதர பகுதிகளிலும் ஹிந்துக்களுக்கு என்னவெல்லாம் கொடுமைகள் நடந்தனவோ அதற்கு சரியான அளவுக்கு முஸ்லீம்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார்கள் பீகார் வாழ் ஹிந்துக்கள்.
வங்கக் கலவரத்தின் போது, அங்கே ஜீவாதாரத்திற்காக சென்றிருந்த பீகாரி ஹிந்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதே பீகாரில் கலவரம் வெடிக்க முக்கியக் காரணம். பீகார் வாழ் முஸ்லீம்களை காப்பாற்ற காந்தி அங்கே ஓடோடி வந்தார்.
ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால், தான் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக மிரட்டினார்.
(தொடரும்)
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்




