இந்த நாளில் அன்று… 1983ல்: இலங்கைக்கு தியாகப் பயணம்!

Published:

ezham problem paza nedumaran - 2026

இதே நாளில்,26/08/1983 : ஈழப் பிரச்னை 1983இல் உக்கிரமாக இருந்தபோது, 07/08/1983இல் பழ.நெடுமாறன் தலைமையில் மதுரையிலிருந்து பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இலங்கைக்கு தியாகப் பயணம் செல்வதற்காக மதுரையிலிருந்து இராமேஸ்வரம் வரை நடந்து அங்கிருந்து படகுகள் மூலமாக ஈழத்துக்கு செல்வதாக இருந்த போராட்டம் தமிழக காவல்துறையால் தடுக்கப்பட்டது.

அந்த நிகழ்வுகளுக்குப் பின், இதே நாளில் (26/08/2018) நான் ஏற்பாடு செய்து பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த ஈழப் பிரச்சனை ஆலோசனைக் கூட்டம் சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலின் மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் அன்றைக்கிருந்த கொடூர நிலையிலும் சிங்களவர்களிடமிருந்து தப்பி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், ஈழவேந்தன்,கரிகாலன் போன்ற ஈழத்தைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஏ. நல்லசிவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பா.மாணிக்கம், அன்றைய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, இரா. செழியன், அதிமுக, மேலவைத் துணைத் தலைவராக இருந்த புலமைப்பித்தன் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ALSO READ:  அன்புத் தம்பி அண்ணா மலைக்கு...

#ஈழப்பிரச்சனை #Tamil_Eelam #pa_nedumaran #பழ_நெடுமாறன்

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img