health tips - 2026

அப்பாச்சி தீர்வு: அல்சர், வாய்ப்புண், ஒற்றை தலைவலி, மீசை முடி, முடி உதிர்வு, நெற்றிக்கருப்பு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

எளிய மருத்துவம்

பச்சை வாழைப்பழம் அல்சர் வராது தடுக்கும்.

உடலில் எந்தப் பகுதியில் வீக்கம் கண்டாலும் புதினாக் கீரையை ரசமாக வைத்து இரண்டு நாள்கள் இரவில் சாப்பிட குணமாகும்.

ஒற்றைத் தலைவலி தீர வெள்ளைக் காகிதம் ஒன்றை சுருட்டிக்கொளுத்தி அதன் புகையை நுகர குணமாகும்.

மாசிக் காயை பாலில் உரைத்து தேன் கலந்து தடவ வாய்ப்புண் நீங்கும். பசு நெய்யில் கோரோசனையை குழப்பித் தடவ வாய்ப்புண்குணமாகும்.

பெண்களுக்கு மீசை முளைக்கிறதா?

மஞ்சள் செடியின் இவைகளில் 10 எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து இடித்துத் தூளாக்கி அத்துடன் 30 மி.லி. தேங்காய் எண்ணெயைக் கலந்து வைத்துக் கொண்டு தினமும் இரவு இந்த எண்ணெயை முடி வளர்ச் சியுள்ள இடத்தில் நன்கு தேய்த்து காலையில் குளித்து விடவும். இரண்டு மூன்று நாள்களிலேயே முடிகள் உதிர்ந்து விடும். பிறகு முளைக்காது.

நெற்றியில் ஏற்படும் கறுப்பு போக…

வில்வ மரக்கட்டையை சந்தனக் கல்லில் அரைத்துப் பூச குணமாகும்.

முடி உதிர்வதைத் தடுக்க…

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை முக்கால் கிலோ. அவுரி இலை முக்கால் கிலோ, செம்பருத்தி பூ 75. மருதாணி இலை முக்கால் கிலோ, மல்லிகை அல்லது முல்லைப்பூ 1 கிலோ, 15 எலுமிச்சம்பழம், பச்சைக் கற்பூரம் 5 கிராம், நல்லெண்ணெய் ஒரு கிலோ, பசும்பால் 1 கிலோ.

இலைகளை தனித்தனியே இடித்து சாறெடுத்து நல்லெண்ணெயில் கலக்க வேண்டும். செம்பருத்திப் பூவையும் இடித்து எண்ணெயில் கலந்து பால் கலந்து மூன்று நாள்கள் வெயிலில் வைக்க வேண்டும்.

மூன்று நாள்களுக்குப் பிறகு வாசனைக்காக மல்லிகைப் பூவை இக்கலவையில் போட்டு மூடி வைத்து நான்காம் நாள் இக்கலவையை அடுப்பிலேற்றி மூன்று – மணி நேரம் காய்ச்ச வேண்டும்.

கொதிக்கும் எண்ணெயில் எலுமிச்சம் பழத்தை பொடியாக நறுக்கிப் போட்டு மிதமான சூட்டில் ஒரு மணி நேரம் காய்ச்சி இறக்கி பச்சைக் கற்பூரம் போட வேண்டும். இரண்டு நாள்கள் கழித்து எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்த வர தலைமுடி கருமையாகும். முடி உதிர்வது நிற்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். நல்ல தூக்கம் வரும். 25 வயதிற்குள் உள்ளவர்கள் பயன்படுத்த இளநரை மறையும்.

பல் ஈறுகளின் நோய் குணமாக..

ஒரு சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் நான்கு பூண்டுப் பற்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து மிதமான சூட்டோடு அந்த வெந்நீரில் வாய்க் கொப்பளித்து வர நோய்க் கிருமிகள் பல் இடுக்கு களிலோ, ஈறுகளிலோ அண்டாது. பல தொந்தரவுகளும் வராது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.