பார்லி.,யில் 10 ஆயிரம் பேருக்கு மேல் வேலை இழக்கும் அபாயம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்

parle buscuits - 2026

விற்பனை சரிவு காரணமாக 10 ஆயிரம் பேருக்கு மேல் வேலை இழப்புக்கு ஆளாகலாம் என்று பார்லி நிறுவனம் கூறியுள்ளது

நாட்டின் முன்னணி பிஸ்கட் நிறுவனங்களில் ஒன்றான பார்லி நிறுவனத்தின் விற்பனை கடும் சரிவைக் கண்டு உள்ளது! இதை அடுத்து சுமார் 10,000 பேர் வரை வேலை இழப்புக்கு ஆளாகலாம் என்று பார்லி நிறுவன பிரிவுகளின் தலைவர் மயங்க் ஷா தெரிவித்துள்ளார்!

இது குறித்து அவர் கூறியபோது… பொருளாதார வளர்ச்சி குறைவதால் கிராமப்புற பகுதிகளில் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படும் இதை அடுத்து 10,000 பேர் வரை வேலை இழப்புக்கு ஆளாக நேரிடலாம். பொருளாதார வளர்ச்சி குறித்து அரசு உடனடியாக தலையிடா விட்டால் நிலைமை மிகவும் மோசமாகி விடும்..” என்றார்!

பார்லி நிறுவனத்தில் ஒரு லட்சம் நேரடி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.