இஸ்ரோ சிவன் பெயரில் டிவிட்டர் கணக்கெல்லாம் இல்லீங்க..!

Published:

pslv c44 sivan - 2026

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு என்று பிரத்யேகமாக எந்த சமூக வலைதள கணக்குகளும் கிடையாது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

சிவன் பெயரில் சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகள் எதுவுமே அவருடையது கிடையாது என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

கைலாசவடிவூ சிவன் என்ற பெயரில் பல சமூக வலைத்தள கணக்குகள் இருப்பதாக கவனத்துக்கு வந்துள்ளது. இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் பெயரில் தனிப்பட்ட கணக்குகள் எதுவும் இல்லை என்பதை தெளிவாக்குகிறோம். இஸ்ரோவின் அதிகாரபூர்வ கணக்கை தொடருங்கள்… என்று குறிப்பிட்டுள்ளது இஸ்ரோ.

சிவன் பெயரில் போலியாக சில கணக்குகளைத் தொடங்கி, பல்வேறு தகவல்களை சிலர் பரப்புகின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளன. மேலும், குழப்பத்தை ஏற்படுத்த என்றே பலர் வேண்டுமென்றே சில பொய்யான தகவல்களையும் சிவன் பெயரில் கணக்கு தொடங்கி மேற்கொள்கின்றனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img