2 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்! கதறி துடிக்கும் தாய்!

இந்தியா கிரைம் நியூஸ் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
child 1 - 2026

அஸ்ஸாம் மாநிலத்தில் மகளை ஆற்றில் வீசிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் டமால்பூரை சேர்ந்தவர் பீர்பால் பாரோ (35). இவரது மனைவி ஜூனு பாரோ (30). இவர்களுக்கு 2 வயதில் ரிஷிகா என்ற மகள் இருந்தார்..

கடந்த சனிக்கிழமை அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார் பீர்பால். சிறிது நேரம் கழித்து தனியாக வீடு திரும்பியுள்ளார்.

child 3 - 2026

தனித்து வந்த கணவரிடம் குழந்தை எங்கே என ஜூனு கேட்டார். அதற்கு அவர் போர்லா ஆற்றில் மகளை தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்த ஜூனு, தனது உறவினர்களிடம் கதறி அழுத படி விஷயத்தைக் கூற, அவர்களுடன் சென்று குழந்தையை ஆற்றில் தேடியுள்ளனர்.

அப்போதும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து காவல்துறையில் புகார் கூறியதை அடுத்து தீயணைப்பு துறையினர் குழந்தையை தேடினர். அப்போது ஆற்றிலிருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

child - 2026

இதனைக் கண்டு துடிதுடித்த கதறி அழுதார் ஜூ.னு இதையடுத்து காவல்துறையினர் பீர்பாலை கைது செய்து விசாரித்த போது அவர் கூறிய பதிலால் அதிர்ச்சி அடைந்தனர் கடவுள் எனது கனவில் வந்து இது போல் மகளை ஆற்றில் வீச கூறினார். அதனால் நானும் ஆற்றில் வீசினேன் என தெரிவித்துள்ளார்.

child 2 - 2026

கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பீர்பால் பில்லி சூனியத்தை நம்பினார், மந்திரவாதியின் ஆலோசனையின் பேரிலேயே அவர் இப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மன நிலை சரியில்லாதவர் போல் இருப்பதால் இவர் மந்திரவாதியின் பேச்சை கேட்டுக் கொண்டு இப்படி செய்தாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.