பையோடு போனா 2 கிலோ … கல்யாண பத்திரிக்கை காட்டினா 35 கிலோ… வெங்காயம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
onion - 2026

பையோடு போனால் ரெண்டு கிலோ வெங்காயம். கல்யாண பத்திரிக்கை காண்பித்தால் 35 கிலோ வெங்காயம்!

கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை விண்ணளவு உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு பெரும் துயரத்தைத் தந்துள்ளது.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் வெங்காய விலை ஒரு கிலோ ரூ.80ஐத் தொட்டு விட்டது . ஆனால் பிஸ்கமான், நெபெட் மூலம் மக்களுக்கு நியாய விலையில் வெங்காயம் கிடைக்க வழி செய்து உள்ளார்கள்.

மார்க்கெட் விலையை விட குறைவாக 35 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் தருகிறார்கள். அதனால் சாமானிய மக்களுக்கு சிறிது உதவிகரமாக உள்ளது.

பை எடுத்துச் செல்வதற்கு 2 கிலோ வெங்காயமும் கல்யாண பத்திரிக்கை காட்டுபவர்களுக்கு 35 கிலோ வெங்காயமும் தருகிறார்கள்.

ஆனால் அவ்வாறு வெங்காயம் வாங்குபவர்கள் முன்கூட்டியே தம் பெயர், போன் நம்பர்களை பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டியிருக்கும்!

ALSO READ:  திமாகி நக்சல்கள் - யார் என்று சொல்லவும் வேண்டுமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.