vankodumai

புகுந்த வீட்டுக்கு கணவனை நம்பி திருமணமாகி போன பெண் அந்த வீட்டிலிருக்கும் மாமனார் மற்றும் மைத்துனரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை ராஜஸ்தானில் நடந்துள்ளது .

ராஜஸ்தானின் ஜல்ராபத்தானில் உள்ள பால்தா பகுதியில் திருமணமான ஒரு பெண் மாமனார் பரத் சிங், அவரது மைத்துனர் மகேந்திர சிங் மற்றும் அவரது கணவர் பிரதான் சிங் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணமானதிலிருந்து குழந்தை இல்லை .

கடந்த ஒரு மாதமாக அப்பெண்ணை மாமனார் பரத்சிங்கும் மைத்துனர் மகேந்திராசிங்கும் பலாத்காரம் செய்துள்ளனர் இதை அப்பெண் தன்னுடைய கணவரிடம் கூறியதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை . மேலும் அவர்கள் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார்கள் .

இதனால் பயந்து போன அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி போலிஸாரிடம் அந்த மூன்று பேர் மீது பலாத்கார புகார் கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த போலீசார் அந்த மூவர் மீதும் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். பிறகு ஜல்ராபத்தானில் உள்ள பால்தா பகுதியில் ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞாயிற்றுக்கிழமை மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர் .

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending