ராம நாமத்துடன்… 51 ஆயிரம் செங்கற்கள்! ராமர் கோவிலுக்காக!

Published:

ram briks - 2026

ராமர் கோவிலுக்கு 51 ஆயிரம் செங்கற்கள். ஒவ்வொரு கல்லின் மீதும் ராமநாமம் எழுதப் பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளி வந்த பின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தடைகள் நீங்கி விட்டன. அதேபோல் பக்தர்களிடம் இருந்தும் கொடையாளர்கள் இடமிருந்தும் மிகப்பெரிய அளவில் நன்கொடைகள் வருகின்றன.

அதேபோல் பிகே செங்கற்சூளை தவைவர் சந்தீப்வர்மா தன் நன்கொடையை அறிவித்துள்ளார். அவர் ராமர் கோயில் கருவறை கட்டட வேலைகளுக்காக 51 ஆயிரம் செங்கற்களை தானமாக அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த செங்கற்களின் மேல் ராமநாம முத்திரை பதித்திருக்கும்.

இதுகுறித்து சந்தீப் வர்மா கூறுகையில் ராமர் கோயிலுக்கு அனுகூலமாக தீர்ப்பு வெளிவந்ததுமே ராம நாமம் எழுதிய செங்கற்களை அளிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன் என்று கூறினார்.

இந்த செங்கற்களை மிகவும் கவனமாக தயாரித்து வருகிறோம். மொத்தம் 18 சூளைகளில் செங்கற்கள் தயாராகின்றன. இதுவரை 4000 செங்கற்கள் தயாராகி உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img