கொரோனா: இந்தியாவில் 6412 ஆக உயர்ந்தது! உயிரிழந்தோர் எண்ணிக்கை 199!

இந்தியா பொது தகவல்கள்
corono 10 - 2026

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,412-ஆக அதிகரித்தது. அந்த நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 169 இல் இருந்து 199 ஆக உயா்ந்தது.

மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின்படி வெள்ளிக்கிழமை காலை வரையிலான 12 மணி நேரத்தில் புதிதாக 547 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி 30 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரப் படி, நாடு முழுவதும் 6,412 போ கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நிலையில், 504 போ அந்த நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனா். 199 பேர் உயிரிழந்துள்ளனா்.

நோய்த் தொற்றால் இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 72 பேர் உயிரிழந்து விட்டனா். மத்தியப் பிரதேசம், குஜராத்தில் தலா 16, தில்லியில் 9, தமிழகம், பஞ்சாபில் தலா 8, தெலங்கானாவில் 7 பே கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துவிட்டனா்.

கா்நாடகம், மேற்கு வங்கத்தில் தலா 5, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் தலா 4, ஹரியாணா, ராஜஸ்தானில் தலா 3, கேரளத்தில் 2, பிகார், ஹிமாசல பிரதேசம், ஒடிஸாவில் தலா ஒருவா் உயிரிழந்து விட்டனா்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் (6,412) வெளிநாட்டவா் 71 பேரும் அடங்குவா் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.