ஆண்கள் கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

cricket council - 2026

சர்வதேச நடுவர்கள் பேனலில் முதல் பெண் அம்பயராக, 51 வயதான இந்தியாவைச் சேர்ந்த ஜி எஸ் லட்சுமியை நியமித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் – ஐசிசியி. முதல் பெண் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடியவர் ஜி.எஸ்.லட்சுமி! 2008-2009ல் உள்நாட்டு பெண்கள் போட்டியில் 3 ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார்.

தற்போது இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, ஆண்கள் விளையாடும் போட்டிகளிலும் இவர் நடுவர் பணி செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து ஜி.எஸ்.லட்சுமி கூறும் போது, முதல் பெண் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது. ஒரு வீராங்கனையாகவும், கள நடுவராகவும் தான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் சர்வதேச போட்டிகளிலும் சிறந்த போட்டி நடுவராக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.