டிச.25,26 தேதிகளில் திருமலை ஆலயம் மூடல்!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tirupathi therottam - 2026

சூரிய கிரகணத்தை முன்னிட்டு டிசம்பர் 25, 26 தேதிகளில் திருமலை ஆலயம் மூடப்படும்.

சூரிய கிரகணத்திற்காக டிசம்பர் 25, 26 இரண்டு நாட்களும் சேர்ந்து 13 மணிநேரம் திருமலை ஸ்ரீவாரி ஆலயக் கதவுகள் மூடப்பட உள்ளன.

டிசம்பர் 26 வியாழன் காலை 8.08 மணி முதல் பகல் 11.16 மணி வரை சூரிய கிரகணம் உள்ளது.

ஆலய சம்பிரதாயத்தின்படி 6 மணி நேரம் முன்பாக டிசம்பர் 25 புதன் இரவு 11 மணிக்கு ஸ்ரீவாரி ஆலயம் கதவுகளை மூட உள்ளார்கள்.

டிசம்பர் 26 வியாழன் மதியம் 12 மணிக்கு ஆலயக் கதவுகள் திறக்கப்பட்டு ஆலயத்தை சுத்தம் செய்த பின் மதியம் 2 மணிக்கு பக்தர்களின் தரிசனம் தொடங்கும்.

பக்தர்கள் கவனத்தில் கொள்ளும்படி திருமலா திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.