தெலங்கானா ஏற்படும் முன் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பின்மையுடன் வாழ்ந்தார்கள்!

Published:

telanganaminister - 2026

தனி தெலங்காணா மாநிலம் ஏற்படுவதற்கு முன் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பின்மை யோடு வாழ்ந்தார்கள்… என்று கூறியுள்ளார் மைனாரிட்டி நலத்துறை அமைச்சர் ‘கொப்புல’ ஈஸ்வர்.

“தெலங்காணா முதல்வர் கேசிஆர் ஆதரவால் கிறிஸ்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். அதற்கு முன்பு பாதுகாப்பின்மையை உணர்ந்தார்கள். கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு பலப் பல நல்ல திட்டங்களை மேற்கொண்ட பெருமை கேசிஆரையே சாரும்.

மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். வெள்ளிக்கிழமை எல்பி ஸ்டேடியத்தில் மாபெரும் கிறிஸ்மஸ் விருந்து ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் கேசிஆர் வருகை தருகிறார்” என்று அமைச்சர் கொப்புல ஈஸ்வர் தெரிவித்தார்.

வியாழனன்று ரங்காரெட்டி மாவட்டம் கோகாபேட்டையில் அரசாங்கம் ப்ரஸ்டீஜியசாக அமைக்க முன்வந்துள்ள கிறிஸ்டியன் பவனுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

” இந்த மாநகரத்தில் கிறிஸ்தவர்களுக்கு மகாபவனம் இருக்க வேண்டும் என்ற மகா சங்கல்பத்தோடு இத்தனை செலவில் நிலம் ஒதுக்கி 10 கோடி ரூபாய் நிதி கூட அளித்துள்ள முதல்வர் கேசிஆர் தன் நல்ல மனதை வெளிப்படுத்தியுள்ளார் “என்றார் அமைச்சர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

” நாட்டில் வேறு எந்த மாநிலமும் கிறிஸ்தவர்களை இத்தனை தூரம் அணைத்துக் கொண்டது இல்லை” என்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் கிறிஸ்தவர்களுக்கு இருந்த பெரிய பிரச்சனை கூட தீர்ந்துவிட்டது என்று அமைச்சர் குறிப்பிட்டார். கிறிஸ்தவர்களின் மயானத்திற்காக 40.21 ஏக்கர் நிலம் ஒதுக்கிய பத்திரங்களை சிஎஃப்சி கார்ப்பரேஷன் எம்டி காந்தி வெஸ்லீக்கு அமைச்சர் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட கல்வித் துறை அமைச்சர் சபீதா ரெட்டி பேசுகையில் முதல்வர் ‘நல்ல மனசு உள்ள மகாராஜா’ என்றார். அனைத்து வர்க்க மக்களின் கண்களிலும் ஒளியை பார்க்க விரும்புபவர் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ பிரகாஷ் கௌட், எம்எல்சி ராஜேஷ்வர், மைனாரிட்டி நலத் துறை ஆலோசகர் ஏகே கான் மற்றும் பலர் பங்கேற்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img