யசோதைக்கும் கண்ணனுக்கும் உள்ள உறவு போல்… பத்திரிகையாளர் உறவு!

இந்தியா லைஃப் ஸ்டைல்
telangana writers - 2026

யசோதா – கிருஷ்ணன் போல தெலங்காணா – பத்திரிகையாளர் உறவு. மாநிலத்தின் மீது அன்பினால் கட்டப்பட்டுள்ளனர்… என்றார் கல்வகுண்ட்ல கவிதா!

தாமோதரனாக யசோதையின் வாத்சல்யத்திற்கு ஸ்ரீகிருஷ்ணன் கட்டுப்பட்டது போலவே தெலங்காணாவில் ஜெர்னலிஸ்டுகள் ஏதோ ஒருவிதத்தில் தெலங்காணா மீது உள்ள பிரேமைக்கு கட்டுப்பட்டு உள்ளார்கள் என்று முன்னாள் எம்பி கல்வகுண்ட்ல கவிதா கூறினார் .

‘கம்பாலபல்லி’ கிருஷ்ணா எழுதிய தி ஜெர்னி ஆஃப் எ ஜர்னலிஸ்ட் என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று தெலுங்கு விஸ்வ வித்யாலயாவில் நடந்தது.

முக்கிய விருந்தினராக முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா, சிறப்பு விருந்தினராக ஆந்திர ஜோதி எடிட்டர் கே. ஸ்ரீநிவாஸ், டி சாட் எடிட்டர் ஆர் சைலேஷ் ரெட்டி, என்டிவி எடிட்டர் சிவப்ரசாத், ஹெச்எம்டிவி ஈவோ என் ஶ்ரீனிவாஸ் ரெட்டி, tv5 மார்க்கெட்டிங் வைஸ் ப்ரசிடென்ட் ஸ்ரீநிவாச மூர்த்தி, டிஎன்என் சேனல் சேர்மன் டாக்டர் சங்கம் ரெட்டி பிரித்திவிராஜ் ஆகியோர் பங்கேற்று நூலை வெளியிட்டனர்.

அப்போது பேசுகையில் கவிதா “ஸ்ரீ கிருஷ்ணருக்கு தாமோதரன் என்று இன்னொரு பெயர் உள்ளது. யாராலும் கட்டப்பட இயலாதவன் யசோதம்மாவின் அன்புக்கு எவ்வாறு கட்டுப்பட்டானோ அதேபோல் தெலங்காணாவில் பத்திரிக்கையாளர்கள் கூட ஏதோ ஒரு விதத்தில் தெலங்காணா மீது உள்ள அன்புக்கு கட்டிப்போட பட்டுள்ளார்கள்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.