தில்லி உள்பட பல இடங்களில் நில அதிர்வு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
02 July14 earthquake - 2026

தலைநகர் தில்லி உட்பட பல்வேறு வட மாநிலங்களில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 190 கிமீ., ஆழத்தில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 என பதிவாகியுள்ளது.

இதை அடுத்து தில்லி, என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் சில வடமாநிலங்களில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. அப்போது வீடுகளில் அலங்கார விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட்டவை அசைந்து ஆடின. இந்த நில அதிர்வு பாகிஸ்தானிலும் உணரப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.