மணமகளின் படுக்கையறை காட்சி! மணமேடையில் மணமகன் காட்டிய வீடியோ! வைரல்!

Published:

bride - 2026

சீனாவில் இளம் ஜோடி ஒன்றுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகளின் படுக்கையறை வீடியோவை மணமகன் அனைவர் முன்பும் மணமேடையில் ஒளிபரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு சீனாவில் உள்ள ஃபூஜியான் பகுதியில் கடந்த டிசம்பர் 31ம் தேதி திருமண நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகன் மற்றும் மணமகள் நிற்கும் மேடையில் திரை ஓன்று போடப்பட்டிருந்தது. அனைவர்க்கும் ஏன் அந்த திரை அங்கு உள்ளது என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் மணமகன் மற்றும் மணமகளின் சிறுவயது சுவாரசியமான சம்பவங்கள் அந்த திரையில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி வீடியோ ஒளிபரப்பானது. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் திடீரென மணமகனின் சகோதரனுடன் மணமகள் படுக்கை அறையில் இருக்கும் விடீயோ ஒளிபரப்பானது.

இதனை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் எனக்கு ஒன்றும் தெரியாது என நினைத்தாயா? என மணமகன் மணமகளை பார்த்து கேட்டுள்ளார். உடனே கையில் இருந்த பூச்செண்டை தூக்கி வீசிவிட்டு மணமகள் அங்கிருந்து அழுதுகொண்டே சென்றுள்ளார்.

bride 1 - 2026

வீட்டு பராமரிப்பு பணிகள் நடிப்பெறுவதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட கேமிராவில் இந்த காட்சிகள் பதிவானதாக மணமகன் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

அந்த மணமகள் அவரது சகோதரியின் கணவருடன் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட மணமகனின் வீட்டிற்கு வந்த மணப்பெண் அங்கிருந்த படுக்கையறையில், அவரது சகோதரி கணவருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இது மணமகன் அந்த அறையில் வைத்திருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அந்த பெண்ணை பழிவாங்க நினைத்துள்ளார்.

இதற்காகவே திருமண நாள் வரை காத்திருந்த மணமகன் அந்த வீடியோவை திருமண நிகழ்ச்சியின் போது உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார்.

மணப்பெண்ணுக்கு ஒரு வீடும், காரும் பரிசளிப்பதாக கூறிய பிறகே அவர் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாக மணமகன் கூறியுள்ளார்.

ஆனால், பணத்திற்காக தன்னை ஏமாற்றியதைத்தாங்கி கொள்ள முடியாத மணமகன் மேடையில் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் சீனாவில் உள்ள சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது

ஆனால், இது உண்மையான காட்சி இல்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட காட்சி எனவும் சிலர் கூறிவருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img