திருமலை கெஸ்ட் ஹவுஸில் மது, மாது, சல்லாபம், லஞ்சம்…: வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மன் ராஜினாமா!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
svbc pritvi - 2026

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் சேர்மன்… திரைப்பட காமெடியன் பிரித்விராஜ் ராஜினாமா.

சற்றுமுன் ஹைதராபாத் சோமாஜிகுடா பிரஸ்மீட்டில் தன் ராஜினாமாவை வெளியிட்டார்.

எஸ்விபிசி சேர்மன் பிரித்திவிராஜ் உடனே பதவி விலக வேண்டும் என்று தீவிர விமர்சனம் எழுந்தது.

எஸ்விபிசி சேர்மன் பிரித்திவிராஜ் பெண் ஊழியரோடு செய்த சரச சல்லாபம் தொடர்பான ஆடியோ ஊடகங்களில் வைரல் ஆனதன் பலனாக பரபரப்பு.

எஸ்விபிசி ஊழியர் சங்க கவுரவத் தலைவர் ‘கந்தாரபு’ முரளி தீவிரமாக பிருத்வி பற்றி விமர்சித்தார்.

பிரத்விரஜ் என்ற காமுகனை எஸ்விபிசி சேர்மனாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு நியமித்தது. ஊழியர்களை ஆபாசமாக திட்டுவதும் பெண் ஊழியர்களை வேதனைக்கு உள்ளாக்குவதும் அவருக்கு வழக்கமாக உள்ளது. இனி ஒரு கணமும் அவர் எஸ்விபிசியில் பணிசெய்ய அருகதை அற்றவர் என்று விமர்சித்தார்.

எஸ்விபிசி சேர்மனாக விசிஆர் அறைக்குள் வந்து பெண்களை பின்புறமாக அணைப்பேன் என்று பிருத்வி கூறுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
svbc pritvi1 - 2026

வேலை வாங்கித் தருவதாக 36 பேரிடமிருந்து லட்சங்களை வசூலித்துள்ளார் என்றார் . பத்மாவதி கெஸ்ட் ஹவுஸில் அமர்ந்து மது அருந்தியதாக ப்ருத்வி மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பவித்திரமான திருமலையில் பத்மாவதி கெஸ்ட் ஹவுசில் அமர்ந்து மது அருந்தியது, பெண் ஊழியரோடு சல்லாபத்தில் ஈடுபட்ட ஆடியோ வைரலானது, வேலை தருவதாக கூறி லஞ்சம் வாங்கியது என்று ப்ருத்வி பெயரில் பல குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் பிரித்திவிராஜ் மேலிட உத்தரவுப்படி பதவி விலகியுள்ளார்.

டிடிடி சேர்மன் சுப்பாரெட்டி தலையிட்டு ப்ருத்விராஜ் நியமித்த முப்பத்தி ஆறு பேரில் 30 பேரை வேலையில் இருந்து நீக்கினார். பிரித்திவிராஜ் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து டிடிடி விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சுப்பாராவ் உத்தரவிட்டார்.

‘ஜகன் உத்தரவுக்கு மதிப்பளித்து சேர்மன் பதவியில் இருந்து விலகுகிறேன். குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் என்னை செருப்பால் அடியுங்கள்’ என்று செருப்பைத் தூக்கிக் காட்டினார் ப்ருத்வி.

svbc pritviraj - 2026

சற்றுமுன் ஹைதராபாத் சோமாஜிகுடா பிரஸ் கிளப்பில் மீடியாவிடம் பேசிய பிரிதிவிராஜ் ஆவேசமாக காணப்பட்டார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

” இப்போதே டாக்டரை வரவழைத்து வந்து ரத்தப் பரிசோதனை செய்யுங்கள். நான் குடிகாரன் என்பது நிரூபணமானால் செருப்பால் அடியுங்கள். ஜகன் முதலமைச்சராக வேண்டும் என்ற தீட்சை இருந்தேன். எல்லா பழக்கங்களையும் விட்டு விட்டேன். சனிக்கிழமையில் இருந்து நல்ல தண்ணீர் கூட குடிக்கவில்லை. நான் மிகுந்த மன வேதனையில் உள்ளேன்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.